அதிமுகவின் ஆலங்குளம் தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளருமான மனோஜ் பாண்டியன், இன்று அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைந்தார். சென்னை அண்ணா அறிவாலயம் சென்ற அவர், திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தன்னை இணைத்துக்கொண்டார்.
திமுகவில் இணைந்ததற்கான காரணம்
திமுகவில் இணைந்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த மனோஜ் பாண்டியன், அதிமுக தலைமையைக் கடுமையாக விமர்சித்தார்.
"வேறொரு இயக்கத்தை நம்பி, அந்த இயக்கத்தின் சொல்படிதான் நடக்கின்ற துர்பாக்கியமான காலம்தான் தற்போது அதிமுகவில் இருக்கிறது. உழைப்பை அங்கீகரித்து அங்கீகாரம் தராத, உழைப்பு வேண்டாம் என்று ஒவ்வொரு தொண்டரையும் விரட்டக்கூடிய எடப்பாடி பழனிசாமியுடைய நோக்கம் என்ன, அவருடைய சிந்தனை என்ன?
அதிமுக தற்போது பாஜகவின் கிளைக்கழகமாக உள்ளது. எந்தக் கொள்கைக்காக அதிமுக உருவானதோ, அது காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளது," என்று அவர் குற்றம் சாட்டினார்.
மு.க. ஸ்டாலினுக்குப் பாராட்டு
திராவிடக் கொள்கையைப் பாதுகாக்கும் தலைவராக மு.க. ஸ்டாலின் செயல்படுவதால் திமுகவில் இணைந்ததாக மனோஜ் பாண்டியன் தெரிவித்தார்.
"கொள்கையைப் பின்பற்றக்கூடிய திராவிடக் கட்சியுடன் நான் இணைந்துள்ளேன். இன்று திராவிடக் கொள்கையைப் பாதுகாக்கின்ற தலைவராக, போராட்டக் கொள்கையை எங்கும் அடகு வைக்காத ஒரு தலைவராக, எவ்வளவு சோதனை வந்தாலும் முயற்சிகளைச் சிறப்பாக செய்யக்கூடிய தலைவராகவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் செயல்படுவதால், தற்போது திமுகவில் இணைந்துள்ளேன்" என்றார்.
பதவி விலகல் அறிவிப்பு
மேலும், இன்று மாலை 4 மணிக்குத் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக மனோஜ் பாண்டியன் அறிவித்துள்ளார். இவரின் இந்த முடிவு தென் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
                
LIVE 24 X 7