இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (SIR) புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நிறைவடைந்ததையடுத்து, இன்று (டிசம்பர் 16) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தச் சிறப்புத் திருத்தத்தின் முடிவில், புதுச்சேரியில் 1.03 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி வாக்காளர் பட்டியல் நிலவரம்
புதுச்சேரி மாவட்டத் தேர்தல் அதிகாரி குலோத்துங்கன், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். இறந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் இரட்டைப் பதிவு கொண்டவர்கள் என மொத்தம் 1.03 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இது மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையில் 10.04% ஆகும்.
இந்த நீக்கங்களுக்குப் பிறகு, தற்போது புதுச்சேரியில் 7.64 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். புதுச்சேரி மாவட்டத்தில் மாஹி, ஏனாம் உட்பட 25 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. தகுதியுள்ள வாக்காளர்கள் தவறுதலாக நீக்கப்பட்டிருந்தால், ஜனவரி 15 வரை பட்டியலில் சேர்க்கக் கோரி விண்ணப்பிக்கலாம். இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியிடப்படும்.
மேற்கு வங்கத்தில் நீக்கம்
இதே சிறப்புத் திருத்தப் பணியின் (SIR) கீழ், மேற்கு வங்க மாநிலத்திலும் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது. மேற்கு வங்கத்தில் மொத்தம் 58 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில், 24 லட்சம் இறந்தவர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன என்றும், நிரந்தரமாக இடம் மாறியவர்கள் என கூறி 19.92 லட்சம் பேரும், 1.38 லட்சம் பேர் போலி வாக்காளர்கள் எனக் கூறி நீக்கப்பட்டனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

LIVE 24 X 7