ஜி.எஸ்.டி. கவுன்சிலின் சமீபத்திய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, அத்தியாவசியப் பொருட்கள், மோட்டார் வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் உள்ளிட்ட பலவற்றின் மீதான வரி விகிதங்கள் குறைக்கப்பட்டுள்ளன. இந்த வரி குறைப்பு, பொருட்களின் விலையை நேரடியாகக் குறைக்கும் என்பதால், மக்களின் வாங்கும் திறன் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கை, மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒரு நேரடியான மாற்றத்தை ஏற்படுத்தும் எனப் பலரும் வரவேற்றுள்ளனர். குறிப்பாக, பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கும், நுகர்வோர் சந்தையில் புதிய உற்சாகத்தை ஏற்படுத்துவதற்கும் இந்த வரி குறைப்பு உதவும் எனப் பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மக்களின் பாக்கெட்டில் பணம் மிச்சமாகும் என்ற மத்திய அரசின் வாக்குறுதி, இதன் மூலம் நிஜமாகி வருவதாகப் பல தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
LIVE 24 X 7









