கடந்த சில மாதங்களுக்கு முன், ஹிண்டன்பர்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த அறிக்கை வெளியானதை அடுத்து, அதானி குழுமப் பங்குகளின் மதிப்பு கடும் சரிவைச் சந்தித்தது.
இந்த விவகாரதொடர்பாகச் செபிபி விரிவான விசாரணை மேற்கொண்டது. அதன் முடிவில், அதானி குழுமம் எந்தவிதமான கணக்கு முறைகேடுகளையும் செய்யவில்லை என்றும், பங்குச் சந்தை விதிகளின்படி எந்தவிதமான விதிமீறலிலும் ஈடுபடவில்லை என்றும் செபி கூறியுள்ளது. இந்த அறிவிப்பு, அதானி குழுமத்திற்கு பெரும் நிம்மதியைக் கொடுத்துள்ளது.
இந்த அறிவிப்பு பங்குச் சந்தையில் ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும் எனவும், அதானி குழுமத்தின் பங்குகளின் விலை மீண்டும் உயரத் தொடங்கும் எனவும் பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
LIVE 24 X 7









