விபரீதமான கொண்டாட்டம்
லக்னோவில் உள்ள சௌக் காவல் நிலையப் பகுதியில் இந்தக் கொண்டாட்டம் நடந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சமூக வலைதளங்களில் பரவும் காணொளியில், கார் ஒன்று சாலையில் ஓடிக்கொண்டிருக்கும்போது, அதில் பயணம் செய்த சில இளைஞர்கள் காரின் கதவில் தொங்கியபடி பயணித்து, மேற்கூரையில் மீது பட்டாசுகளைக் கொளுத்துவது தெளிவாகப் பதிவாகியுள்ளது.
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, சாகச முயற்சி செய்யும் நோக்குடன் இந்தக் குழுவினர் இப்படிப் பொறுப்பற்ற செயலில் ஈடுபட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிக போக்குவரத்து உள்ள நேரத்தில், பொதுமக்களின் பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படாமல் செய்யப்பட்ட இந்தக் காரியத்திற்குக் சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிந்தன.
காவல்துறையின் எச்சரிக்கை மற்றும் நடவடிக்கை
காணொளி வைரலாகப் பரவியதைத் தொடர்ந்து, லக்னோ காவல்துறை உடனடியாகச் செயல்பட்டு, இந்த விபரீதச் செயலில் ஈடுபட்ட நபர்களை அடையாளம் காணும் விசாரணையைத் தொடங்கியுள்ளது.
பொதுப் பாதுகாப்பிற்குக் குந்தகம் விளைவித்ததாகவும், அத்துடன் போக்குவரத்து விதிகளை மீறியதாகவும் சம்பந்தப்பட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் அந்த இளைஞர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சாகசச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
लखनऊ के ट्रामा सेंटर के पास चलती कार की छत पर आतिशबाजी का वीडियो वायरल-- नवाबो की नगरी का हाल @lkopolice @Uppolice @lucknowtraffic @dgpup #lucknowpolice #UPPolice pic.twitter.com/rPfNEa7SLL
— riteshsrivastava-ऋतुराज (@riteshs61566480) October 21, 2025
LIVE 24 X 7









