இயக்குநர் அருண்பிரபு இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து வெளியான 'சக்தித் திருமகன்' திரைப்படத்தின் கதை தன்னுடையது என ஒருவர் குற்றம் சாட்டிய நிலையில், இது 'முற்றிலும் தவறான அவதூறு' என அருண்பிரபு விரிவான விளக்கம் அளித்துள்ளார்.
திருட்டுக் கதை குற்றச்சாட்டு
செப்டம்பர் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான 'சக்தித் திருமகன்' திரைப்படம், அண்மையில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது. சமூகப் பிரச்சினைகளைப் பேசிய இப்படத்துக்கு நல்ல வரவேற்புக் கிடைத்த நிலையில், சுபாஷ் சுந்தர் என்பவர் இப்படத்தின் கதை தன்னுடையது எனக் குற்றம் சாட்டினார். இது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அருண்பிரபுவின் முதல் மறுப்பு
இந்தக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, இயக்குநர் அருண்பிரபு தனது சமூக வலைதளப் பதிவில், "மிகவும் தவறான அவதூறு. சொந்த உழைப்பில் பல வருடங்கள் உழைத்து எழுதியது. நன்றி வணக்கம்" என்று முதலில் சுருக்கமாக மறுப்பு தெரிவித்திருந்தார்.
ஆவணங்களுடன் விரிவான விளக்கம்
இந்நிலையில், மீண்டும் இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விளக்கம் ஒன்றை அளித்து, அதற்கான மின்னஞ்சல் இணைப்பையும் அருண்பிரபு பதிவிட்டுள்ளார்.
"பல வருட உழைப்பிற்குப் பின் இது போன்ற அவதூறுகள் மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது. பல முன்னணி ஊடகங்கள் இதை post செய்யும் போதும், பலர் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டதை ஒட்டியும் இதைத் தெளிவு படுத்த வேண்டும் என்று தோன்றுகிறது.
2014ல் இருந்தே எழுதப்பட்ட கதை தான் 'சக்தித் திருமகன்', 'பராசக்தி' என்ற தலைப்பில் இருந்தது. இதில் கிட்டு என்ற கதாபாத்திரமும், அவன் Secretariat தரகர் வேலையில் ஈடுபடுபவன் என்பதும், பெரியாரிஸ்ட் சுவரெழுத்து சுப்பையாவின் வளர்ப்பில் வளர்க்கப்பட்ட ஒரு சிறுவன் மக்களைக் கேள்வி கேட்கத் தூண்டுகிறான் என்பதும் அப்போதே எழுதப்பட்டது.
சில நாட்களாகச் சமூக வலைதளங்களில் 'சக்தித் திருமகன்' திருட்டுக் கதை எனவும், அது 2022லேயே எழுதப்பட்ட இன்னொருவரின் கதை என்றும் யாரோ சொல்லியிருக்கிறார். இது முற்றிலும் தவறு. 2014 ஆம் வருடத்திலிருந்து இத்திரைக்கதை தொடர்பாக என்னிடம் எல்லா சாட்சியங்களும் உள்ளன. மின்னஞ்சல் பகிர்வுகள், தயாரிப்பாளர்கள்/நடிகர்களுக்கு அனுப்பிய திரைக்கதைப் பகிர்வுகள், பதிவுச் சான்றிதழ்கள், வீடியோ ஆடியோ recordings முதலிய ஆவணங்கள் உள்ளன. இவை அனைத்துமே 2022ற்கு முன்பே நடந்தவை.
இன்னொருவர் கதையை/ திரைக்கதையைத் திருடி எழுத வேண்டிய இயலாமை எனக்கில்லை. ஒரு படத்தை எடுப்பது மிக மிகக் கடினம். இதையெல்லாம் தாண்டி இது போன்ற சதி அவதூறுகளைச் சமாளிப்பது மனக்கஷ்டத்தை ஏற்படுத்துகிறது.
மேற்கொண்டு இதில், தெளிவோ ஆதாரங்களோ வேண்டுமெனில் தேவையான முறையான இடத்தில் மட்டுமே சமர்பிப்பது நன்று என்று தோன்றுகிறது. மக்களும், பத்திரிக்கை/ ஊடக/ சமூக வலைத்தள நண்பர்களும் என் தரப்பு கருத்தினை அறிந்து கொள்ளவே, இப்பதிவு. இந்த சர்ச்சை பதிவுகளுக்கும் சதி அவதூறுகளுக்கும் முற்று புள்ளி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

LIVE 24 X 7