அரசு அதிகாரிகள், அமைச்சர்களுடன் போராட்ட குழுவினர் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்திய நிலையிலும், எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை. இதனையடுத்து தொடர்ச்சியாக 13-வது நாளாக ரிப்பன் மாளிகை முன்பு ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ரிப்பன் மாளிகை முன்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், போராட்டத்தினால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதாகக் கூறி தேன்மொழி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
மனுவினை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி, தூய்மைப் பணியாளர்களை சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
2 நாட்களில் தீர்வு ஏற்படும் என்பதால் விசாரணையை செவ்வாய்கிழமை தள்ளி வைக்க கோரிய தூய்மை பணியாளர்கள் தரப்பு கோரிக்கையை ஏற்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. மேலும் அனுமதிக்கப்பட்ட இடங்களில் போராட்டத்தை தொடரலாம் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
LIVE 24 X 7









