இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் நாயன்மார்கள் போற்றிப் பாடிய திருக்கேதாரம் எனப்படும் கேதார்நாத் திருக்கோவிலும் திறக்கப்பட்டது. இமயமலையில் 11,000 அடி உயரத்தில் உள்ள திருக்கேதாரம் எனப்படும் கேதார்நாத் திருத்தலமானது,ஜோதிர்லிங்க சிவாலய திருத்தலம். அன்றைய நாளில் சார்தாம் யாத்திரையில் 12,000 பேர் பங்கேற்றனர்.
இந்நிலையில் விஷ்ணு பகவானுக்கு அர்ப்பணிப்பட்ட பத்ரிநாத் கோயிலின் நடை இன்று காலை திறக்கப்பட்டது. முன்னதாக பாதுகாப்பு காரணங்களுக்காக ஆன்லைன் முன்பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் இன்று காலை 6 மணிக்கு பத்ரிநாத் சார் தாம் யாத்திரையை உத்தரகாண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தொடங்கி வைத்தார்.
பின்னர் முதலமைச்சர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் ஆய்வு செய்தார். முன்னதாக இந்திய ராணுவத்தின் கர்வால் ரைபிள்ஸ் இசைக்குழுவினரால் பக்தி பாடல்கள் இசைக்கப்பட்ட நிலையில், மேலும் திறப்பு விழாவின் போது ஹெலிகாப்டர்கள் மூலம் பக்தர்கள் மீது பூக்கள் தூவப்பட்டன.
ஆழ்வார்களின் பாசுரங்களில், பத்ரிநாத் திருத்தலம் திருவதரியாச்ரமம் என்று குறிப்பிடப்படுகிறது. பத்ரிநாத், திவ்ய தேசங்களுள் ஒன்றாகும், அதாவது ஆழ்வார்களால் போற்றப்பட்ட 108 திருத்தலங்களுள் ஒன்றாகும். பத்ரிநாத். திருமங்கையாழ்வார் பத்ரிநாத் பெருமாளைப் போற்றி மொத்தம் 22 பாசுரங்கள் பாடியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
LIVE 24 X 7









