அரசியல்

குதிரை பேர வழக்கில் விஜய்க்கு திமுக செக்....தவெக அரசின் அடுத்த மூவ் என்ன?

By Sumalekha
06 Aug 2026, 06:00 PM
குதிரை பேர வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதன் பின்னணி மற்றும் அரசியல் தாக்கம் குறித்து பல்வேறு தரப்பில் விவாதம் தீவிரமடைந்துள்ளது.
‘குதிரை பேர வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்' என நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருப்பது 'விஜய்க்கு தி.மு.க. வைக்கும் செக்' என அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாக்காக மாறியிருக்கிறது. தி.மு.க. தரப்பினர் குதிரை பேரத்தில் ஈடுபடுவதாக ஊத்தங்கரை தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ இளையராஜா கொடுத்த புகாரில் திருநாவுக்கரசு உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கிலும் தனக்கு முன்ஜாமின் வேண்டுமென உயர் நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி மனுத் தாக்கல் செய்திருந்தார். 'பல கோடி ரூபாய் ஊழல் செய்திருப்பது ஆவணங்கள் மூலம் தெரியவந்துள்ளது' என அரசுத் தரப்பில் வாதாடியதால், முன்ஜாமின் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், செந்தில்பாலாஜியை கைது செய்ய தடை விதித்து உத்தரவிட்டது. தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கையெழுத்திட்ட செந்தில்பாலாஜி, தன்மீதான வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன் என தெரிவித்தார். இதற்கிடையே 'த.வெ.க.

தொடர்ந்து, செந்தில்பாலாஜியின் விசுவாசிகளான கரூர் தொழில் அதிபர்கள் ரமேஷ், கார்த்தி இருவரும் கைது செய்யப்பட்டனர். செந்தில்பாலாஜி, அவரின் தம்பி அசோக் குமார் ஆகியோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. செந்தில்பாலாஜியும், அசோக் குமாரும் இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தில் முன்ஜாமின் பெற்று தினமும் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டுவரும் நிலையில், லஞ்ச ஒழிப்பு போலீஸார் டாஸ்மாக் முறைகேடுகள் குறித்து செந்தில்பாலாஜி தொடர்புடைய இடங்களில் ரெய்டு நடத்தினர். இதன் முடிவில் செந்தில்பாலாஜி, தி.மு.க. மேலிடத்திற்கு வேண்டப்பட்ட ரத்தீஷ் ராஜ், கரூர் கார்த்தி உட்பட ஏழு பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.

எம்.எல்.ஏ.வை விலை பேசியதாக கூறப்படும் குதிரை பேர வழக்கை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும்' என இந்த வழக்கில் கைதாகி ஜாமினில் வெளியே நீதிமன்றத்தில் வந்திருக்கும் கரூர் ரமேஷ் உயர் மனுத் தாக்கல் செய்திருக்கிறார். ரமேஷை தொடர்புகொள்ள முடியாத நிலையில் அவருக்கு நெருக்கமான தி.மு.க பிரமுகர்களிடம் பேசினோம். "குதிரை பேர வழக்கில் செந்தில்பாலாஜியை கைது செய்ய முடியாமல் போனதால், டாஸ்மாக் வழக்கில் கைது செய்ய ஆளுங்கட்சி முயற்சிக்கிறது. செந்தில்பாலாஜி டாஸ்மாக் அமைச்சராக சில ஆண்டுகள் மட்டுமே இருந்தார்.

பிறகு ஒன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்தார். அப்போது டாஸ்மாக் அமைச்சராக இருந்த முத்துசாமியை லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரிக்கவில்லை. விசாரணை என்றால் சம்பந்தப்பட்ட அனைவரையும் விசாரிக்க வேண்டும். செந்தில்பாலாஜியை மட்டும் குறிவைத்து இந்த வழக்கு செல்கிறது. அதனால்தான் ஜாமினில் வெளியே வந்த ரமேஷ், 'இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என வழக்குப் போட்டிருக்கிறார். சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டால், மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் இந்த வழக்கு சென்றுவிடும்.

அதன்பிறகு எங்கள் கட்சி எம்.எல்.ஏக்களை ராஜினாமா செய்யச் சொல்லி குதிரை பேரம் பேசுகிறார்கள் என தி.மு.க., அ.தி.மு.க. சார்பில் கவர்னரிடம் கொடுத்த புகார்கள்கூட விசாரிக்கப்படலாம். இதேபோல 'என் கட்சி எம்.எல். ஏவை விலைக்கு வாங்கிவிட்டார்கள் என தினகரன் கொடுத்த புகாரும் விசாரிக்கப்படலாம். சி.பி.ஐ. விசாரணை முடிவில் த.வெ.க.தான் பல எம்.எல்.ஏ.க்களை குதிரை பேரத்தில் வாங்கியது என்ற உண்மையும் வெளிவர வாய்ப்பிருக்கிறது. மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நபர்கள் மட்டுமே சி.பி.ஐ. விசாரணை கேட்க முடியும் என்பதால் திமுக தலைமையின் யோசனைப்படி கரூர் ரமேஷ் சி.பி.ஐ விசாரணை கேட்டுள்ளார்' என்றார்.

இதுகுறித்து தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் பேசினோம். "சி.பி.ஐ. விசாரணை கிடைத்தால், கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கொடுத்த 'என்னை ஆளுங்கட்சியினர் தொடர்புகொண்டார்கள்' என கொடுத்த டி.வி. பேட்டி வாக்குமூலத்தின்படி ஆளுங்கட்சி மீது வழக்குப் பதிவு செய்ய முடியும். அதேபோல 'என் கட்சி எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்யச் சொன்னார்கள்' என்ற வைகோவின் வாக்குமூலம் அடிப்படையிலும் ஆளுங்கட்சி மீது வழக்குப் பதிவு செய்ய முடியும்.

தினகரன் கட்சி எம்.எல்.ஏ.வை கடத்திச் சென்றது பற்றி விசாரிக்க ஆரம்பித்தால் பல்வேறு உண்மைகள் வெளிவரும். இந்த விசாரணை தமிழக போலீஸ் கையில் இருப்பதால்தான் முழுக்க முழுக்க தி.மு.க.வை பழிவாங்கும் நோக்கத்தோடு செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். சி.பி.ஐ. விசாரணைக்கு அனுமதி கிடைத்தால் உண்மையாகவே குதிரை பேரத்தில் ஈடுபட்டது ஆளுங்கட்சிதான் என்பது தெரியவரும். வழக்கு என்பது தி.மு.கவிற்கு புதிது அல்ல, எத்தனை வழக்குகளை போட்டாலும் அதை சட்டரீதியாக தி.மு.க சந்திக்கும், வெற்றிபெறும்" என்றார்.

தி.மு.க. தலைமைக்கு நெருக்கமான சிலர் நம்மிடம், 'டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியபோது ரத்தீஷ் ராஜ்தான் டாஸ்மாக் நிர்வாகத்தின் பல முடிவுகளை எடுக்கிறார் என்பது வாட்ஸ் அப் தகவல் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. அது தொடர்பான தகவல் வெளியே வந்தவுடனேயே 'டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் ஊழியர்களை பணி செய்யவிடாமல் சோதனை நடக்கிறது' என உடனடியாக தி.மு.க. நீதிமன்றத்தை நாடி சோதனைக்கு தடை வாங்கியது.

ரத்தீஷ் ராஜ் சிக்கிவிடுவார் என்பதால்தான் அவ்வளவு அவசரமாக தடை வாங்கியது. இப்போதும் ரத்தீஷ் ராஜ் கைது செய்யப்படுவதை தடுக்கவே, குதிரை பேர வழக்கில் சி.பி.ஐ. விசாரணை கேட்டு அந்த வழக்கை திசை திருப்புகிறது" என்றனர்.

பல மேட்டர்கள் வெளிவரும் போலயே!