K U M U D A M   N E W S

Seeman : ‘நந்தன் என்னை வெகுவாக பாதித்த திரைப்படம்’.. உருகிய சீமான்!

Seeman Praised Nandhan Movie : ''கலையைப் போற்றுவதும், கலைஞர்களைக் கொண்டாடுவதும் சமூகத்தின் தார்மீகக் கடமையாகும். ஆகவே, சமத்துவத்தைப் போதிக்கும் ‘நந்தன்’ எனும் உன்னதப்படைப்பைக் கண்டுகளிப்போம்! நற்கருத்துகளை விதைக்கும் மக்களுக்கான கலைஞர்களைக் கொண்டாடுவோம்’’ என்று சீமான் கூறியுள்ளார்.

'இலங்கையில் புதிய அதிபர்.. இப்பயாவது இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டுங்க'.. அன்புமணி கோரிக்கை!

''இலங்கையில் தேர்தல் முடிவடைந்து புதிய அதிபர் பதவியேற்கவுள்ள நிலையில், மீனவர்கள் மீதான தாக்குதலையும், கைது நடவடிக்கைகளையும் கைவிடும்படி அவரிடம் இந்தியா வலியுறுத்த வேண்டும்'' என்று அன்புமணி கூறியுள்ளார்.

பிரபல A+ ரவுடி சிடி மணிக்கு சுத்துப்போட்ட போலீஸ்.. உயிருக்கு பாதுகாப்பு கோரி தந்தை கண்ணீர்

பிரபல ரவுடி சிடி மணியை தனிப்படை போலீசார் கைது செய்துள்ள நிலையில், சிடி மணியின் உயிருக்கு பாதுகாப்பு வழங்க கோரி அவரது தந்தை கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

சட்டவிரோத மின்வேலியில் சிக்கி தந்தை மகன் உள்ளிட்ட 3 பேர் பலி..

திருப்பத்தூர் மாவட்டம் பெருமாள்பட்டு பகுதியில் மின்வேலியில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். சட்டவிரோத மின்வேலியில் சிக்கி குரிசிலாப்பட்டு பகுதியை சேர்ந்த சிங்காரம், அவரது மகன் லோகேஷ் மற்றும் கரிபிரான் ஆகியோர் உயிரிழந்தனர்.

சொந்த மண்ணில் அசத்திய அஸ்வின்... முதல் டெஸ்டில் அபார வெற்றி பெற்ற இந்தியா

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வங்க தேச அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 280 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. 2வது இன்னிங்சில் தமிழக வீரர் அஸ்வின் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தல்

இலங்கை அதிபராகும் புரட்சி நாயகன்.. யார் இந்த அனுர குமார திசநாயகே?

அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக கடுமையாக போராட்டம் வெடித்த நிலையில், அதிபர் மாளிகையை சூறையாடினார்கள். நிலைமை கட்டுக்கடங்காமல் சென்றதால் கோத்தபய ராஜபக்சே பதவியை ராஜினாமா செய்துவிட்டு நாட்டை விட்டே தப்பிச் சென்றார். அரசுக்கு எதிரான இலங்கை மக்களின் கொந்தளிப்பை அநுர குமார திசாநாயகே நன்கு பயன்படுத்திக் கொண்டார்.

கஞ்சா விற்பனையை தடுக்க வீடு வீடாக சென்று சோதனை.. போலீசாரின் அதிரடி நடவடிக்கை

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் கஞ்சா விற்பனை தொடர்பாக போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 50க்கும் மேற்பட்ட போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தேவநாதனின் சொத்துகள் பறிமுதல்

மயிலாப்பூர் நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதனிடம் இருந்து 4 கார்கள், ரூ.1 கோடி மதிப்பிலான பத்திர ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன

கொடைக்கானலில் பிளாஸ்டிக் பாட்டில் பயன்பாடு.. மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு

கொடைக்கானலில் 5 லிட்டருக்கு குறைவான பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்தும் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், அவற்றை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு ஒரு பாட்டிலுக்கு ரூ.20 பசுமை வரி விதிக்கப்படும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

பிரபல ரவுடி சிடி மணி கைது

சேலத்தில் தலைமறைவாக இருந்த பிபல ரவுடி சிடி மணியை தனிப்படை போலீசார் கைது செய்தனர். இவர் மீது கொலை முயற்சி, ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன