K U M U D A M   N E W S

வீட்டு வேலை செய்த சிறுமி உயிரிழந்த விவகாரம்... போலீசார் அதிரடி நடவடிக்கை

சென்னை அமைந்தகரையில் வீட்டில் வேலை செய்த 16 வயது சிறுமி அடித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் வீட்டின் உரிமையாளர் மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பதியில் குவிந்த பக்தர்கள்.. இலவச தரிசனத்திற்கு 24 மணி நேரம் வரை காத்திருக்கும் பக்தர்கள்....

தொடர் விடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் குவிந்தனர். இதன் காரணமாக இலவச தரிசனத்திற்கு 24 மணி நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

திருத்தணியில் கொட்டித் தீர்த்த கனமழையால் மாட வீதியில் குளம்போல் தேங்கிய மழைநீர்.. பக்தர்கள் கடும் அவதி

திருத்தணியில் கொட்டித் தீர்த்த கனமழையால் மாட வீதியில் குளம்போல் மழை நீர் தேங்கியது. இதனால், கோயிலுக்கு வந்த பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.

கூவம் ஆற்றில் மிதந்து வந்த பச்சிளம் சிசு.. படுபாதக செயலை செய்தது யார்..? விசாரணையை துவக்கிய போலீஸ்

சென்னை அண்ணாநகரில் கூவம் ஆற்றில் பிறந்து சில மணி நேரங்களேயான குழந்தையின் உடல் மிதந்து வந்துள்ளது. இதையடுத்து உடலை கைப்பற்றிய போலீசார் பச்சிளம் சிசுவை கூவம் ஆற்றில் வீசிச் சென்றது யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரியில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்..

புதுச்சேரி ரேஷன் கடைகளில் அரசு அறிவித்தபடி தீபாவளி மானிய பொருட்கள் வழங்கக்கோரி அதிமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி வந்த பயணிக்கு குரங்கம்மை அறிகுறி..

சார்ஜாவில் இருந்து திருச்சி வந்த பயணிக்கு குரங்கம்மை அறிகுறி தென்பட்டதால் அவர் உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டார்.

விஜய் யாரோ எழுதிய வசனத்தை பேசியவர்; அரசியல் அறிவு கிடையாது - நல்லசாமி அதிரடி

யாரோ எழுதிய வசனத்தையும், பாடலையும் பாடி, வசனம் பேசியவர் விஜய் என்றும் அவருக்கு அரசியல் அறிவு கிடையாது என்றும் தமிழ்நாடு 'கள்' இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவித்துள்ளார்.

"ரூ.2,858 கோடி" - சென்னை மக்களுக்கு அடித்தது லக்

சென்னை ஒரகடம் பகுதியில் ரூ.2,858 கோடி மதிப்பில் உலகளாவிய மையம் அமைப்பதற்காக அனுமதி கேட்டு செயிண்ட் கோபைன் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.

உடலில் ரத்தக் காயங்கள்.. பாத்ரூமில் இறந்து கிடந்த சிறுமி.. வீட்டு உரிமையாளர் கைது

16 வயது சிறுமி அடித்து கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, வீட்டின் உரிமையாளர் முகமது நவாஸ், அவரது மனைவி உட்பட 6 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீண்டும் இணையும் தனுஷ் - ஐஸ்வர்யா..? - நீதிமன்றம் உத்தரவவால் எகிறும் எதிர்பார்ப்பு

நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கில் இருவரும் ஆஜராகாததால் வழக்கு விசாரணை வரும் 21ம் தேதிக்கு ஒத்தி வைத்து சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.