K U M U D A M   N E W S

மகா கும்பமேளா 2025: திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய பிரதமர் மோடி

பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்து கொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.

காலி மதுபாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம்.. ஏப்ரல் முதல் அமல்.. தமிழ்நாடு அரசு தகவல்

தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் ஏப்ரல் 2025 முதல் நடைமுறைக்கு வரும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

திருப்பரங்குன்றத்தில் 195 பேர் மீது வழக்குப்பதிவு

175 ஆண்கள், 20 பெண்கள் மீது 6 பிரிவில் திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஆட்டோவில் சிறுமி கடத்தல் - அண்ணாமலை கண்டனம்

தமிழ்நாடு முழுவதும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்துவிட்டதாக அண்ணாமலை குற்றச்சாட்டு.

திமுக அரசு வெட்கப்பட வேண்டும் -இபிஎஸ் கண்டனம்

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே டாஸ்மாக் கடை ஒன்றில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது - இபிஎஸ்

பிட்டர் வீட்டில் பல கோடி? காஞ்சியில் பரபரக்கும் ரெய்டு

காஞ்சிபுரத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, பிட்டர் கண்ணன் என்பவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.

டெல்லி தேர்தல் - குடியரசுத் தலைவர் வாக்குப்பதிவு

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாக்கு செலுத்தினார்.

யுஜிசி வரைவு விதிமுறைகளை எதிர்த்து ஆலோசனை.. உயர்கல்வித் துறை அமைச்சர்கள் பங்கேற்பு

பல்கலைக்கழக மானிய குழுவின் புதிய விதிமுறைகளை எதிர்த்து கர்நாடகா மாநில அரசு ஏற்பாடு செய்துள்ள ஆலோசனை கூட்டத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.

ஈரோடு கி) இடைத்தேர்தல்; 9 மணி வாக்குப்பதிவு நிலவரம்?

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காலை 9 மணி நிலவரப்படி 10.95% வாக்குகள் பதிவு.

திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனுமதி

மதுரையில் 144 தடை நிறைவடைந்த நிலையில் திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி.