Today Headlines: 6 மணி தலைப்புச் செய்திகள் | 6 AM Headlines Tamil | 23-09-2024
Today Headlines: 6 மணி தலைப்புச் செய்திகள் | 6 AM Headlines Tamil | 23-09-2024
Today Headlines: 6 மணி தலைப்புச் செய்திகள் | 6 AM Headlines Tamil | 23-09-2024
சென்னை கிண்டியில் ஏக்கர் பரப்பளவில் மக்கள் பயன்பாட்டிற்காக பூங்கா, பசுமைவெளி உருவாக்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
கார்த்தி, அரவிந்த் சாமி நடித்துள்ள மெய்யழகன் திரைப்படம் வரும் 27ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறித்து சூர்யா பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
கூட்டணியில் இருந்து கொண்டு மதுவிலக்கு மாநாட்டை நடத்த இருக்கிறாரே என பாராட்ட ஆளில்லை என விசிக தலைவர் திருமாவளவன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
என்கவுண்டர் தமிழகத்தில் அதிகரித்து வருவது தமிழக நலனுக்கு நல்லதல்ல என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) CPIM மாநில தலைவர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
விஷவாயு தாக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.30 லட்சம் நிவாரணம் வழங்கக்கோரி உறவினர்கள் போராட்டம்.
விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய்யின் அரசியல் பயணம், முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதைப் போல உள்ளதாக மத்திய அமைச்சர் எல் முருகன் விமர்சித்துள்ளார்.
Rajinikanth About Manasilayo Song : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் திரைப்படம் அக். 10ம் தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் ரிசல்ட் குறித்தும் மனசிலாயோ பாடலின் ஹிட் பற்றியும் ரஜினி பேசியது வைரலாகி வருகிறது.
Tirupati Laddu Issue : திருப்பதி லட்டு விவகாரம் குறித்து பிரதமர் மோடிக்கு ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் திருப்பதி தேவஸ்தானத்தின் புனிதத் தன்மையை சீர்குலைக்க முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு முயற்சிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
Bus Driver Attack in Dharmapuri : தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் பகுதியில் தனியார் ஆம்னி பேருந்தும், அரசு பேருந்தும் முந்தி சென்ற விவகாரத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் ஆம்ணி பேருந்து ஓட்டுநரை கடுமையாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.