K U M U D A M   N E W S

up

புழல் சிறை முன் குவியும் திமுகவினர்.. வாகன ஓட்டிகள் கடும் அவதி...

செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ள நிலையில் புழல் சிறை முன்பு திமுகவினர் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் அந்த பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜியை வரவேற்க புழல் சிறைக்கு முன் குவிந்த திமுக தொண்டர்கள்...

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ள நிலையில் அவர் இன்று மாலை அல்லது நாளை புழல் சிறையில் இருந்து வெளியே வருவார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அவரை வரவேற்கும் விதமாக புழல் சிறை வாசலில் திமுக தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். 

Meiyazhagan Review : செம ஃபீல் குட் மூவி... 5 ஸ்டார் ரேட்டிங்... கார்த்தியின் மெய்யழகன் விமர்சனம்!

Meiyazhagan Movie First Review in Tamil : பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த் சாமி நடித்துள்ள மெய்யழகன் திரைப்படம் நாளை (செப்.27) திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் முதல் விமர்சனம் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

மதுரையில் யார் பெரிய ஆள்…? என Instagram-ல் சவால் விட்டு ஸ்டேடஸ் வைத்த இளைஞர் வெட்டிக்கொலை!

Instagram Reels Issue in Madurai : மதுரையில் யார் பெரிய ஆள்…? என Instagram-ல் சவால் விட்டு ஸ்டேடஸ் வைத்த இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

6 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

Senthil Balaji : “சாட்சிகளை தொடர்புகொள்ளக் கூடாது..” செந்தில் பாலாஜிக்கு ஜாமின் நிபந்தனைகள் என்னென்ன?

Senthil Balaji Bail Condition Details in Tamil : சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தில் கைதான செந்தில் பாலாஜிக்கு, உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது. இந்த நிபந்தனைகள் என்னென்ன என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

Senthil Balaji : செந்தில் பாலாஜிக்கு ஜாமின்... இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு!

Senthil Balaji Bail : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை பிணையில் விடுவிக்க சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது என அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

துணை நடிகருக்கு தில்ல பாத்தியா.. முதல்வர் போஸ்டுக்கு கமெண்ட் அடித்த சௌந்தரராஜா

Actor Soundararaja Criticize CM Stalin Tweet : செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டதற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்த நிலையில், அதனை துணை நடிகர் சௌந்தரராஜா விமர்சித்துள்ளார்.

Senthil Balaji : ஆ.ராசாவை வீழ்த்திய செந்தில் பாலாஜி.. ராசாவை விட 3 நாட்கள் சிறையில் அதிகம் - பாஜக பிரமுகர் அதிரடி

BJP SG Suryah on Senthil Balaji Jail : அதிக நாட்கள் சிறையில் இருந்ததில் ஆ.ராசாவை, செந்தில் பாலாஜி வீழ்த்தி உள்ளதாக தமிழக பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா தெரிவித்துள்ளார்.

"செந்தில் பாலாஜி ஜாமின்.. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது" - முத்தரசன்

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது.இந்நிலையில், செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்திருப்பது ஆறுதல் அளிக்கிறது. உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.