K U M U D A M   N E W S

மதுரையில் யார் பெரிய ஆள்…? என Instagram-ல் சவால் விட்டு ஸ்டேடஸ் வைத்த இளைஞர் வெட்டிக்கொலை!

Instagram Reels Issue in Madurai : மதுரையில் யார் பெரிய ஆள்…? என Instagram-ல் சவால் விட்டு ஸ்டேடஸ் வைத்த இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஊர் எல்லையை மாற்றக் கோரி போராட்டம் - கைது

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே செங்கீரை ஊராட்சி எல்லை தொடர்பாக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் . இதையடுத்து பேச்சுவார்த்தைக்கு வந்த அதிகாரிகளுடன் உடன்பாடு எட்டப்படாததையடுத்து போராட்டக்காரர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.

“வசூல்ராஜா MBBS வேலையை மட்டும் இந்து சமய அறநிலையத்துறை செய்கிறது” - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் குருக்கள் மற்றும் அலுவலர் பணியிடங்களை நிரப்ப கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இன்று விசாரணைக்கு வந்த வழக்கில், இந்து சமய அறநிலையத்துறை கோவில்களை முறையாக பராமரிப்பது இல்லை. அந்த துறை வசூல் ராஜா எம்பிபிஎஸ் பணிகளை மட்டுமே செய்கிறது என்று மதுரை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

துணை நடிகருக்கு தில்ல பாத்தியா.. முதல்வர் போஸ்டுக்கு கமெண்ட் அடித்த சௌந்தரராஜா

Actor Soundararaja Criticize CM Stalin Tweet : செந்தில் பாலாஜிக்கு நிபந்தனை ஜாமின் வழங்கப்பட்டதற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்த நிலையில், அதனை துணை நடிகர் சௌந்தரராஜா விமர்சித்துள்ளார்.

மறைந்த பேராயர் எஸ்ரா சற்குணத்தின் மகளுக்கு தொலைபேசி மூலம் விஜய் ஆறுதல்

மறைந்த பேராயர் எஸ்ரா சற்குணத்தின் மகளுக்கு தவெக தலைவரும் நடிகருமான விஜய் தொலைபேசி மூலம் ஆறுதல் தெரிவித்தார்.

Rapido ஓட்டுநரிடம் வழிப்பறி செய்த எஸ்.ஐ. சஸ்பெண்ட்.. காவல் ஆணையர் அருண் அதிரடி நடவடிக்கை

Rapido Driver Robbery Case : ராபிடோ ஓட்டுநரிடம் லஞ்சம் வாங்கியதாக கூறப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் நவநீதகிருஷ்ணனை பணி இடைநீக்கம் செய்து காவல் ஆணையர் அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

திருச்செந்தூர் - விரைவு தரிசன கட்டணம் ரூ.1000 வாபஸ் |

திருச்செந்தூர் சுப்ரமணிய சாமி கோயிலில் விரைவு தரிசனத்திற்கு விதிக்கப்பட்ட ரூ.1000 கட்டணம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.பக்தர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

காரில் 5 சடலம்.. கிடைத்த கடிதம்.. வெளியான புதிய தகவல்

புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம் அருகே தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரும் தற்கொலை செய்து கொண்டனர். இந்தநிலையில் அவர்கள் எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில், தங்களுடைய உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டாம் என எழுதி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கொளுத்திப்போட்ட ஆதவ் அர்ஜூனா.. திருமாவளவனின் லேட் ரியாக்சன்.. சொன்னது என்ன?

''திமுகவுக்கும், விசிகவுக்கும் இடையே கூட்டணி தொடர்பாக எந்த சிக்கலும் எழவில்லை. இனி எழவும் வாய்ப்பில்லை'' என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

School Holiday : பசங்களுக்கு இனி ஜாலி தான்.. காலாண்டு விடுமுறை நீட்டிப்பு.. இத்தனை நாட்களா?

Tamil Nadu School Holiday Announcement : பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்திக்கும்போதெல்லாம் காலாண்டு விடுமுறை நீட்டிக்கப்படுமா என கேள்வி எழுப்பப்பட்டு வந்தது. இது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று அமைச்சர் கூறியிருந்தார்.