K U M U D A M   N E W S

Today Headlines: 01 மணி தலைப்புச் செய்திகள் | 01 PM Today Headlines Tamil

01 மணி தலைப்புச் செய்திகள்

MK Stalin in Coimbatore: பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர்

கோவையில் இன்று பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

"சீமான் திடீரென அந்நியனாகவும் அம்பியாகவும் மாறுவார்" - பிரேமலதா விஜயகாந்த் விமர்சனம்

சீமான் திடீரென்று அந்நியனாக மாறுவார், திடீரென்று அம்பியாக மாறுவார் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

நீட் பயிற்சி மையத்தில் மாணவர்களை அடித்த விவகாரம் - ஆட்சியருக்கு பறந்த உத்தரவு

நெல்லை நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய விவகாரம் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்தது.

சில்லென மாறிய தமிழ்நாடு – வானிலை மாற்றத்தால் மக்கள் மகிழ்ச்சி

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

அந்நியனாகவும், அம்பியாகவும் சீமான் மாறுவார்.. வாய்க்கு வந்ததை பேசக்கூடாது - பிரேமலதா அதிரடி

சீமான் திடீரென்று அந்நியனாக மாறுவார், திடீரென்று அம்பியாக மாறுவார் என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

விஜய் கட்சி தொடங்கியதே இதற்காக தான்.. அரைத்த மாவு வீணாகிவிடும் - முத்தரசன்

விஜய் கட்சி தொடங்கியதே திமுகவை விமர்சனம் செய்வதற்காகவே என்றும் அவரது கொள்கை என்பது அரைத்த மாவையே அரைப்பது போன்றது என்றும் முத்தரசன் தெரிவித்தார்.

கதவணை மதகுகளில் இயந்திர கோளாறு.. குடியிருப்பு பகுதிகளில் சூழந்த வெள்ளநீர்

கோவை மாவட்டம் வெள்ளிப்பாளையம் பவானி ஆற்றில் உள்ள நீர்மின் உற்பத்தி கதவணை மதகுகளில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதனால் மதகுகள் திறக்க முடியாததால் அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. 

குன்னூர்- பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

நேற்று முன்தினம் இரவு நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், பர்லியாறு, கோவை மாவட்டம் கல்லாறு, மேட்டுப்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது

#BREAKING: நீலகிரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை காரணமாக குன்னூர் தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை