இந்தியத் துணை ஜனாதிபதி தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் அமோக வெற்றி.. குவியும் வாழ்த்து!
நாட்டின் இரண்டாவது உயர்ந்த பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழர் என்ற வரலாற்றுச் சாதனை படைத்ததுள்ளார் தமிழக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்
நாட்டின் இரண்டாவது உயர்ந்த பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழர் என்ற வரலாற்றுச் சாதனை படைத்ததுள்ளார் தமிழக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்
துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் தமிழருக்கு ஒரு தமிழர் வாக்களித்து இருக்கிறார். தமிழருக்கு வாக்களித்த தருமருக்கு எனது பாராட்டுக்கள் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் வெடித்துள்ள உட்கட்சிப் பூசல் தொடர்பாக, எடப்பாடி பழனிசாமியை பாஜகவின் ஏஜென்ட் என்று திமுக எம்எல்ஏ எழிலரசன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அதிமுகவிலிருந்து பிரிந்து சென்றவர்களை இணைக்கப் பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்த நிலையில், அதிமுக பொறுப்புகளிலிருந்து செங்கோட்டையன் நீக்கப்படுவதாகப் பொதுச்செயலாளர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
அதிமுகவுடன் பாஜக அமைத்துள்ள கூட்டணி மூழ்கக்கூடிய கப்பல் அல்ல, பறக்கப்போகும் பெரிய ஜெட் விமானம் என்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக முறைகேடு செய்யக்கூடும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் கருத்து தெரிவித்துள்ள நிலையில், மக்கள் அதிக விழிப்புடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
”ஆளுநரின் அறிக்கையைப் படித்தால் அமித் ஷாவே சிரிப்பார். அவமானங்களை மட்டுமல்ல, தொடர் தோல்விகளையும் தாங்கிக் கொள்வது அரிய கலை, நாக்பூரின் ஏஜெண்டாக ஆளுநர் செயல்பட்டு வருகின்றார்” திமுகவின் கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
டாக்டர். வாசுதேவன் மைத்ரேயன், ஒரு புற்றுநோய் சிகிச்சை நிபுணர் மற்றும் அரசியல்வாதி. மூன்று முறை மாநிலங்களவை எம்.பி-யாக பதவி வகித்துள்ள மைத்ரேயன் இன்று அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்தார்.
”2026-ல் விஜய் தமிழக முதல்வர் ஆவார். மகளிருக்கு பாதுகாப்பு அளிப்பார்” என தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த் தொண்டர்கள் மத்தியில் பேசியுள்ளார்.