பள்ளிக்கல்வித் துறை சரியான திசையில் செல்லவில்லை – தமிழிசை செளந்தரராஜன்
பள்ளிக்கல்வித்துறை சரியான திசையில் செல்லவில்லை என்று முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
பள்ளிக்கல்வித்துறை சரியான திசையில் செல்லவில்லை என்று முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
''பள்ளிக்கல்வித்துறை அனுமதி கொடுக்காமல் நிகழ்ச்சி நடந்ததா? பள்ளிக்கல்வித்துறை, தலைமை ஆசிரியரை பலி ஆடாக ஆக்குவதற்கு பதிலாக அமைச்சர் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். ஆசிரியர்களுக்கு பாத பூஜை செய்வது பகுத்தறிவுக்கு எதிரானது அல்ல'' என்று தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.
உங்கள் பெயர் என்ன? பள்ளிகளில் மதம் குறித்து பேசக்கூடாது என்று யார் சொன்னது? என்று மகா விஷ்ணு மாற்றுத்திறனாளி ஆசிரியரிடம் மிக கடுமையாக நடந்து கொண்ட வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன. மகாவிஷ்ணு மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
சென்னை அரசு பள்ளியில் நடந்த சம்பவம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. இந்த விசாரணை அறிக்கையை ஐந்து நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் தொடர்ந்து இதுபோல் சர்ச்சைக்குரிய சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதற்கு பொறுப்பேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
கல்வியே சமத்துவ மலரச் செய்யும் மிகப்பெரிய ஆயுதம் எனும் நிகழ்ச்சி சென்னை அசோக் நகர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது. இதில் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.
சிறையில் முதல் முறை குற்றவாளிகளை தனியாக வைப்பதற்கு திட்டங்கள் ஏதும் உள்ளதா? என தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது
பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்று சென்னை திரும்பிய தமிழக வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அரசுப் பள்ளிகளில் விநாயகர் சதுர்த்தி தொடர்பாக உறுதிமொழி ஏற்க அறிவுறுத்தி வெளியிடப்பட்ட சுற்றறிக்கை ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
Salem FireCrackers Factory Blast : சேலம் மாவட்டம் அயோத்தியா பட்டணம் அடுத்த அரூர் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ள கோமாளிவட்டம் பகுதியில் ஜெயக்குமார் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை விபத்து குறித்து அதிகாரிகள் ஆய்வு