K U M U D A M   N E W S

பிக்பாஸ் செட்டில் தொழிலாளிக்கு நேர்ந்த அசம்பாவிதம்.. விரைந்த போலீஸ்..

சென்னை அருகே பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அப்போது எதிர்பாராத விதமாக பணியில் ஈடுபட்டிருந்த உத்திரபிரதேசத்தை சேர்ந்த முகமது ஷாகின் கான் என்பவர் 20 அடி உயர்த்தில் நபர் கீழே விழுந்துள்ளார். இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

No கடிதம் Only மெயில்.....டிஜிட்டலுக்கு மாறும் த.நா அரசு

தலைமைச் செயலகத்துக்கு வரும் கோப்புகளை டிஜிட்டல் மயமாக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் தலைமைச் செயலகத்துக்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அரசு துறைகளில் இருந்து பெறும் தபால்கள் மற்றும் கடிதங்களுக்கு இனி டிஜிட்டல் முறையில் பதில் அளிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

பிரபல யூடியூபர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்.. புகார்கள் குவிந்ததால் நடவடிக்கை

பிரபல யூடியூபர் வராகி மீது புகார்கள் குவிந்ததை அடுத்து, குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சென்னை காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.

அதிமுக பிரமுகா் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு.. அரசை சாடிய ஆர்.பி.உதயகுமார்

தேனி மாவட்டம் சின்னமனூர் நகர அதிமுக செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Parithabangal: “சும்மா காமெடி பண்ணோம்..” லட்டு வீடியோ சர்ச்சை... வருத்தம் தெரிவித்த பரிதாபங்கள் டீம்

திருப்பதி லட்டு வீடியோ சர்ச்சையான நிலையில், அதற்கு பரிதாபங்கள் யூடியூபர் டீம் வருத்தம் தெரிவித்துள்ளது.

ஏறுமுகத்தில் தங்கம் விலை! அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்

சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.60 ஊயர்ந்து ரூ.7,060-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.480 உயர்ந்து ரூ.56,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

தொல்லை கொடுக்கும் நெல்லை...பள்ளியில் அரிவாளுடன் மாணவன்

நெல்லையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிக்கு அரிவாள், கத்தி மற்றும் இரும்பு ராடுடன் வந்த மாணவனை பள்ளி நிர்வாகம்  டிஸ்மிஸ் செய்துள்ளது. மேலும் 3 மாணவர்களை அக்டோபர் 3ம் தேதி வரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. 

ஓடும் ரயிலில் தடுமாறி விழுந்த பயணி...திக் திக் நிமிடங்கள்

ராமநாதபுரத்தில் ரயிலில் இறங்கும் பொழுது தவறி விழுந்த பயணியை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் காப்பாற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

ஆளுநர் ஆர்.என்.ரவி தான் அறிவாளி.. ஞானம் இல்லாதவன் பகுத்தறிவுவாதியா?.. ஹெச்.ராஜா அதிரடி

மெத்தப்படித்த அறிவாளியாக ஆளுநர் ஆர்.என்.ரவி இருக்கிறார். அதனால் உண்மைகள் மக்களுக்கு சொல்கிறார் என்று பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

நிபா வைரஸ் பரவல் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்

தமிழகத்தில் எந்த மர்மக் காய்ச்சலும் இல்லை என மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.