K U M U D A M   N E W S
Kumudam Ad

‘போராட்டத்தில் ஈடுபடக் கூடாது’ - என்.எல்.சி. தொழிலாளர்கள் சங்கத்துக்கு உத்தரவு

என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பட்டாசு வெடிப்பதில் தகராறு.. சிறுவனின் தாயாரை தாக்கி ரவுடிகள் அட்டகாசம்

பட்டாசு வெடிக்கக் கூடாது என்ற தகராறில் ஐந்து வாலிபர்கள் சரமாரியாக தாக்கியதில், சிறுவனின் தாயாரை படுகாயத்துடன் மருத்துவமனைவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும்... விஜய்யின் அடுத்த பிளான்... நாளை அவசர ஆலோசனை

சென்னை பனையூரில் உள்ள தவெக கட்சி தலைமை அலுவலகத்தில் அக்கட்சி தலைவர் விஜய் தலைமையில் நாளை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற உள்ளது. 234 தொகுதிகளிலும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியான நிலையில் இந்த ஆலோசனை நடைபெற உள்ளது.

வீட்டு வேலை செய்த சிறுமி உயிரிழந்த விவகாரம்... போலீசார் அதிரடி நடவடிக்கை

சென்னை அமைந்தகரையில் வீட்டில் வேலை செய்த 16 வயது சிறுமி அடித்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் வீட்டின் உரிமையாளர் மற்றும் அவரது மனைவி கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவாக இருந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர்..

புதுச்சேரி ரேஷன் கடைகளில் அரசு அறிவித்தபடி தீபாவளி மானிய பொருட்கள் வழங்கக்கோரி அதிமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மீண்டும் இணையும் தனுஷ் - ஐஸ்வர்யா..? - நீதிமன்றம் உத்தரவவால் எகிறும் எதிர்பார்ப்பு

நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து வழக்கில் இருவரும் ஆஜராகாததால் வழக்கு விசாரணை வரும் 21ம் தேதிக்கு ஒத்தி வைத்து சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நவம்பர் மாசம் வந்தாச்சு... 19 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

தமிழ்நாட்டில் இன்று (நவ. 02) 19 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஒரு உயிரிழப்பு கூட இல்லை... பருவமழைக்கு நாங்கள் தயார்! - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

உயிரிழப்பு இல்லாத தீபாவளியாக இந்த ஆண்டு தீபாவளி அமைந்துள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சற்று குறைந்த தங்கம் விலை... இல்லத்தரசிகளுக்கு ஆறுதலான செய்தி!

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 120 குறைந்து ரூ. 58,960க்கு விற்பனை செய்யப்படுகிறது.

செந்தில் பாலாஜியின் தம்பி குமரியில் பதுங்கல்?

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் தேடப்பட்டு வரும் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் கன்னியாகுமரி மேல்கோதையாறில் பதுங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.