K U M U D A M   N E W S

regulations

தரவுப் பாதுகாப்புக்கு முதல் முக்கியத்துவம்: மலேசியத் தமிழ், மலாய் மொழிகளுக்குப் பிரத்யேக 'செய்தி சர்வர்' அறிமுகம் செய்த IPD மீடியா நெட்வொர்க்!

IPD மீடியா நெட்வொர்க், மலேசிய வாசகர்களுக்காக மலாய் மற்றும் தமிழ் மொழிகளுக்குப் பிரத்யேகமான புதிய செய்தி சர்வரை கோலாலம்பூரில் துவக்கியுள்ளது. இதன்மூலம் அதிவேகச் செய்தி அணுகல் மற்றும் உள்ளூர் வாசகர்களின் தரவுப் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளது.

கடைகளை 10 மணிக்கெல்லாம் பூட்ட சொல்வதை ஏற்க முடியாது: ஏ.எம்.விக்கிரமராஜா பேட்டி!

தமிழக முதலமைச்சரே 24 மணி நேரமும் கடைகள் திறக்கலாம் என்று கூறிய பிறகும், போலீசார் இரவு 10, 11 மணிக்கு கடையை பூட்டுங்கள் என்று மாவட்டம் வாரியாக கூறுவதை ஏற்க முடியாது என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

கடன் தர சிபில் ஸ்கோர் பார்க்கல.. ரிப்போர்ட் தான்: விவசாயிகள் மீண்டும் அதிருப்தி

தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் பயிர் கடன் உள்ளிட்ட அனைத்து கடன்களுக்கும் சிபில் பார்த்து மட்டுமே வழங்கப்படும் என மீண்டும் கூட்டுறவுத்துறை விளக்கம் அளித்துள்ளதற்கு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சிபில் ரிப்போர்ட் பார்த்து பயிர் கடனா? முதல்வருக்கு விவசாயிகள் கோரிக்கை

தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் CIBIL Report பார்த்து மட்டுமே பயிர் கடன் கொடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு சுற்றறிக்கை வெளியிட்டுள்ள நிலையில், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இதில் உடனடியாக தலையிட்டு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

Tamil Nadu Police New Rules 2025 | காவலர்களுக்கு புதிய நெறிமுறைகள் அறிவுறுத்தல் | Shankar Jiwal DGP

Tamil Nadu Police New Rules 2025 | காவலர்களுக்கு புதிய நெறிமுறைகள் அறிவுறுத்தல் | Shankar Jiwal DGP

2 லட்சத்திற்கு குறைவாக இருந்தால்.. தங்க நகைகடன் குறித்து சூப்பர் அறிவிப்பு!

பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துகள் அடிப்படையில், நகைக் கடன்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்த கோரி ரிசர்வ் வங்கிக்கு மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.

ரிசர்வ் வங்கிக்கு இது தெரியாதா? தவெக தலைவர் விஜய் அறிக்கை

ஏழை, நடுத்தர மக்களின் ஆபத்பாந்தவனாக விளங்கும் நகைக்கடன் பெறும் வழிமுறைகளைத் திருத்தி, புதிதாக 9 விதிமுறைகள் வெளியிட்டிருப்பதை ரிசர்வ் வங்கி உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

ரயில்களில் பட்டாசுகள் எடுத்து செல்ல வேண்டாம்... பொதுமக்களுக்கு ரயில்வே நிர்வாகம் வேண்டுகோள்!

ரயில்களில் அல்லது ரயில்வே நிலையங்களில் பட்டாசுகள் போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்ல வேண்டாம் என்று ரயில் பயணிகளுக்கு சென்னை கோட்டம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

பட்டாசு வெடிக்கலாம்... ஆனால் சத்தம் வரக் கூடாது.. புகை வரக் கூடாது.. தீபாவளிக்கு புது ரூல்ஸ்!

தீபாவளியன்று பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

TNPSC New Changes : டிஎன்பிஎஸ்சி தேர்வு மதிப்பீட்டில் புதிய மாற்றம்

TNPSC New Changes : அரசுப் பணியாளர் தேர்வு மதிப்பீட்டில் புதிய மாற்றம் கொண்டு வர டிஎன்பிஎஸ்சி முடிவெடுத்துள்ளது. அந்த வகையில் ஏற்கனவே விடைத்தாள்கள் ஸ்கேன் செய்வது போன்று ஸ்கேன் செய்யப்படும். அதனைத் தொடர்ந்து புதிய முறையில் தேர்வர்களின் விடைத்தாளில் பாடவாரியாக அவர்கள் அளித்துள்ள பதில்களை தனியே தனியே பிரித்து எடுக்கப்படவுள்ளது