K U M U D A M   N E W S

re

TVKVijay: அடடே! தோழர்களுக்கு அரசியல் பயிலரங்கம்... தவெக மாநாட்டுக்கு தொண்டர்களை தயார்செய்யும் விஜய்

தவெக மாநாடு வரும் 27ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்பாக கட்சியின் நிர்வாகிகளுக்கு கோச்சிங் கொடுக்க முடிவு செய்துள்ளார் விஜய்.

இரண்டாவது நாளாக தங்கம் விலை உயர்வு... கலக்கத்தில் மக்கள்!

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 160 உயர்ந்து இன்று (அக். 17) ரூ. 57, 280க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஆம்ஸ்ட்ராங் வழக்கு.. முக்கிய சாட்சியை ஏர்போர்ட்டில் சுற்றி வளைத்த போலீஸ்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சுரேஷ் கிருஷ்ணா என்பவர் சாட்சியாக சேர்க்கப்பட்டு விசாரணைக்கு அழைத்து ஆஜராகாமல் இருந்து வந்தார். இதைத்தொடர்ந்து லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் வைத்து அவரை பிடித்த தனிப்படை போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

"ஒரு மாத ஊதியம் போனஸாக வேண்டும்" - தூய்மை பணியாளர்கள் போராட்டம்

கோவை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் ஒரு மாத ஊதியத்தை போனஸாக வழங்கக்கோரி மாநகராட்சி அலுவலகத்தை 2வது நாளாக முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

கரையைக் கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்... சென்னையில் மழைக்கு வாய்ப்பு..? லேட்டஸ்ட் அப்டேட்!

புதுச்சேரி - நெல்லூருக்கு இடையே, சென்னைக்கு வடக்கே கரையைக் கடந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்தது. அதேநேரம் சென்னையில் இன்று மழை இருக்குமா என்பது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கியமான அப்டேட் கொடுத்துள்ளார்.

2 நாளில் 11.84 லட்சம் பேருக்கு அம்மா உணவகங்களில் இலவச உணவு..

கனமழை பாதிப்பு காரணமாக சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2 நாட்களில் 11.84 லட்சம் பேருக்கு இலவச உணவு வழங்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. 

மேட்டூர் அணைக்கு தொடர்ந்து அதிகரிக்கும் நீர்வரத்து

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 16,196 கன அடியில் இருந்து 19,495 கன அடியாக அதிகரிப்பு.

பதுக்கி வைக்கப்பட்ட போதைப்பொருள்..! அதிரடி காட்டிய போலீசார்

முறப்பநாட்டில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கேட்டமைன் மற்றும் சாரஸ் போதைப்பொருள் சிக்கியது.

வானிலை ஆய்வு மையம் கொடுத்த ரிப்போர்ட்! அதிர்ச்சியில் இருந்து மீண்ட மக்கள்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை கரையைக் கடந்ததாக வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

24 மணி நேரத்தில் 27 பேர் உயிரிழப்பு!.... சூடுபிடிக்கும் இஸ்ரேல் - ஈரான் போர்!

லெபனான் மீது வான்வழியே இஸ்ரேல் படை நடத்திய தாக்குதலில் கடந்த 24 மணிநேரத்தில் 27 பேர் பலியாகி உள்ளனர்.