K U M U D A M   N E W S

அன்புமணியின் எமோஷனல் பிளாக்மெயில்.. கண்ணீர் சிந்திய ராமதாஸ்

கடந்த மே 16 ஆம் தேதி கூடிய பாமக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை அன்புமணி ராமதாஸ் உட்பட பெரும்பாலான பாமக மாவட்டச் செயலாளர்கள் புறக்கணித்த போதே, நான் செத்துவிட்டேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளது பாமகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர்கள் வேடம் போடலாம்.. முதல்வர் அப்படியில்லை: சபாநாயகர் அப்பாவு பேட்டி

’பவன் கல்யாண் நடிகர், அவர் வேடம் போடலாம். தமிழக முதலமைச்சர் வேடம் போடுவதும் கிடையாது, நடிப்பதும் கிடையாது’ என சபாநாயகர் அப்பாவு பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

கோபமடைந்த எம்எல்ஏ- ஸ்டிக்கர் மூலம் சமாதானப்படுத்திய அதிகாரிகள்

குடியாத்தம் அருகே சிறிய அளவிலான கைத்தறி பூங்கா திறப்பு விழா நடைப்பெற்றது. இதில், தனது பெயரை கல்வெட்டில் போடவில்லை எனக்கூறி நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் கே.வி.குப்பம் எம்எல்ஏ ஜெகன் மூர்த்தி நிகழ்ச்சியை புறக்கணித்து சென்றார். இதனையடுத்து கல்வெட்டில் எம்எல்ஏ பெயரை ஸ்டிக்கரில் ஒட்டி அதிகாரிகள் கட்சி நிர்வாகிகளை சமாதானப்படுத்தினர்.

தமிழகத்தில் காலியாகும் 6 மாநிலங்களவை இடம்.. தேர்தல் தேதி அறிவிப்பு

தமிழ்நாடு மற்றும் அசாம் மாநிலங்களில் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில், தேர்தல் தேதியினை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வெள்ளையும் இல்ல..காவியும் இல்ல.. எடப்பாடி விமர்சனத்திற்கு முதல்வர் பதில்!

முதல்வரின் டெல்லி பயணம் குறித்து, எதிர்கட்சிதலைவர் எடப்பாடி தெரிவித்த கருத்துக்கு பத்திரிக்கையாளர் சந்திப்பில் விளக்கமளித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.

கோவையில் எய்ம்ஸ்.. நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் வைத்த கோரிக்கை பட்டியல்

நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக பங்கேற்ற நிலையில் பத்திரிகையாளர்களை சந்தித்து கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் குறித்து விளக்கமளித்துள்ளார்.

அடிமை கட்சியா நாங்க? ED குறித்து துணை முதல்வர் உதயநிதி பேட்டி

புதுக்கோட்டையில் நடைப்பெற்ற பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்ற உதயநிதி, பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது ED-க்கு மட்டுமல்ல.. மோடிக்கும் பயப்பட மாட்டோம்” என தெரிவித்துள்ளார்.

இந்தியா தர்மசத்திரமா? உச்சநீதிமன்றத்தின் கருத்துக்கு திருமாவளவன் ஆட்சேபனை

உலக நாடுகளில் இருந்து மக்கள் வந்து குடியேற 'இந்தியா' தர்மசத்திரம் கிடையாது. ஏற்கனவே 140 கோடி மக்கள் உள்ளனர் என உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ள கருத்து மனிதாபிமானத்திற்கு புறம்பாக உள்ளது. உச்ச நீதிமன்றமே இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது அதிர்ச்சி அளிப்பதாக விசிக தலைவரும்., எம்.பி-யுமான முனைவர் தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

நிலுவையில் உள்ள சொத்து வழக்கு.. வேகமெடுக்கும் மோசடி வழக்கு..வசமாய் சிக்கிய Rajendra Balaji | RN Ravi

நிலுவையில் உள்ள சொத்து வழக்கு.. வேகமெடுக்கும் மோசடி வழக்கு..வசமாய் சிக்கிய Rajendra Balaji | RN Ravi