K U M U D A M   N E W S

party

கோபத்தில் சீமான் தம்பிகள்.. தரைதட்டி நிற்கும் நா.த.க

என்னதான் நடக்கிறது நாம் தமிழர் கட்சிக்குள்? பார்ப்போம் இந்த தொகுப்பில்....

கோபத்தில் சீமான் தம்பிகள்.. தரைதட்டி நிற்கும் நா.த.க

தேன்கூடு கலைவது போல, நாம் தமிழர் கட்சியில் இருந்து தம்பிகள் ஒவ்வொருவராக கூட்டம் சேர்த்தபடி வெளியேறி வருகிறார்கள். திரள் நிதிக்கு கணக்கு இல்லை... மரியாதை இல்லை என்றெல்லாம் ஆவேசம் காட்டுகிறார்கள் அந்த தம்பிகள். என்னதான் நடக்கிறது நாம் தமிழர் கட்சிக்குள்? பார்ப்போம் இந்த தொகுப்பில்....

ஆம்ஸ்ட்ராங்கிற்கு அனுமதியின்றி நினைவேந்தல் பேரணி ... கைதான் 200 பேர்!

ஆம்ஸ்ட்ராங்கிற்கு அனுமதியின்றி நினைவேந்தல் பேரணி நடத்த முயன்ற பகுஜன் சமாஜ் கட்சியினர் 200 மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

TVK Vijay : “அரசியல் என்றால் என்னவென்று தெரியுமா..?” தவெக தோழர்களுக்கு விஜய் வெளியிட்ட அறிக்கை!

TVK Leader Vijay Statement : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டுக்கான பந்தக்கால் நடும் விழா இன்று அதிகாலை நடந்து முடிந்தது. அதேவேகத்தில் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை தவெக தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘எந்த கேள்வியும் கேட்க கூடாது’ - சீமானுடன் மன வருத்தத்தோடு விலகிய நா.த.க.வின் மா.செ.

நாம் தமிழர் கட்சியில் இருந்து அனைத்து பொறுப்புகள் மற்றும் அடிப்படை உறுப்பினரிலிருந்து விலகுவதாக, விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் அபூ சுருமார் தெரிவித்துள்ளார்.

TVK Vijay: தவெக மாநாடு பந்தக்கால் நடும் விழா... தலைவர் விஜய் பங்கேற்பு..? ஏற்பாடுகள் தீவிரம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, இந்த மாதம் 27ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான பந்தக்கால் நடும் விழாவில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் வழக்கு – குற்றப்பத்திரிகை தாக்கல்

ஆம்ஸ்டராங் கொலை வழக்கில் பல்வேறு கட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் குற்றப்பத்திரிகை தாக்கல்.

த.வெ.க. கொடியில் யானை சின்னம்.. தேர்தல் ஆணையத்திற்கு கடிதம்.. பி.எஸ்.பி. தகவல்

தமிழக வெற்றிக்கழக கொடியில் யானை சின்னம் இடம்பெற்றது குறித்து தேர்தல் ஆணையம் தலையிட முடியாது என கூற முடியாது என்று பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில செயலாளர் கருப்பையா கூறியுள்ளார்.

விசிக மது ஒழிப்பு மாநாடு... கட்டிய கொடி கம்பங்களை களவாடிய மர்ம நபர்கள்..

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் விசிக மாநாட்டிற்கு நடப்பட்டிருந்த இரும்பு கொடிக்கம்பங்கள் திருடு போனது. சுங்கச்சாவடி அருகே தேசிய நெடுஞ்சாலையின் ஓரங்களில் நடப்பட்டிருந்த கொடிக்கம்பங்களில் இருந்த கொடிகளை கழற்றி கீழே போட்டுவிட்டு ரூ.2 லட்சம் மதிப்புள்ள கொடிக்கம்பங்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். 

TVK Flag Issue : தவெக கொடி பஞ்சாயத்து ஓவர்... க்ரீன் சிக்னல் கொடுத்த தேர்தல் ஆணையம்... விஜய் நிம்மதி!

TVK Flag Issue : தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் யானை சின்னம் இடம்பெறுவதை தடுக்க வேண்டும் என, தேர்தல் ஆணையத்திற்கு பகுஜன் சமாஜ் கட்சி கடிதம் எழுதியிருந்தது. இதற்கு விளக்கம் கொடுத்துள்ள தேர்தல் ஆணையம், தவெக கொடியை பயன்படுத்த எந்த பிரச்சினையும் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.