K U M U D A M   N E W S

பேருந்து நடத்துநர் மீது கொடூர தாக்குதல் நடத்திய கும்பல்.. வெளியான பதைபதைக்கும் காட்சி

கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூர் நோக்கி சென்ற பேருந்தை நடுவழியில் கை நீட்டி அஜித் என்பவர் நிறுத்தியுள்ளார். பேருந்தை நிறுத்தாமல் ஓட்டுநர் சென்றதால் ஆத்திரமடைந்த அவர், தன்னுடைய நண்பர்களுடன் வந்து நடத்துநர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. 

தகாத வார்த்தைகளால் பேசியவரை தட்டிக்கேட்ட நடத்துநர் மீது சரமாரி தாக்குதல்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அரசுப்பேருந்து நடத்துநரை பயணிகள் தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. தகாத வார்த்தைகளால் பேருந்தில் பேசியவரை தட்டிக் கேட்டதால் நடத்துநரை அவருடன் வந்த நபர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.

திமுக - அதிமுக கவுன்சிலர்கள் வார்த்தை போர்... நகராட்சி ஆணையர் கடும் எச்சரிக்கை

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகர்மன்ற கூட்டத்தில் திமுக - அதிமுக கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அவையில் சபை நாகரிகம் இல்லாமல் பேசினால் வெளியேற்றப்படுவீர்கள் என நகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்தார்.

#BREAKING | பயணிகள் கவனத்திற்கு - ரயில்கள் திடீர் நிறுத்தம்.. மக்கள் அவதி

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் சிக்னல் கோளாறு காரணமாக ரயில்கள் நிறுத்தம்

கழிவுநீர் கலந்த குடிநீர் விநியோகம்.. கொந்தளித்த மக்கள்...

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே விநியோகிக்கப்படும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக கூறி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விஜய் வரட்டும், அப்புறம் பார்த்துக்கலாம்... நடிகை கவுதமி ‘பளீர்’ பதில்

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்த பிறகுதான், அவரது செயல்பாடு எப்படி உள்ளது என்பதை பார்க்க முடியும் என்று அதிமுக பொதுக்கூட்டத்தில் நடிகை கவுதமி பேசினார்.

ரஜினிகாந்துக்கு 70 வயசா!.. வாயை பிளந்த ஜெர்மன் சுற்றுலாப் பயணிகள்

நடிகர் ரஜினிகாந்துக்கு 70 வயதா என கேட்டு ஜெர்மனி சுற்றுலாப் பயணிகள் ஆச்சரியமடைந்தனர்.

திடீரென வெடித்த டயர்.. லாரி மீது மோதிய கல்லூரி பேருந்து.. மாணவர்களின் நிலை?

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே தனியார் பேருந்தும், மினி லாரியும் மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

#BREAKING : TN Rain Alert : சென்னைக்கு ஆபத்தா..? - விறுவிறுவென ரெடியாகும் வீரர்கள்..

TN Rain Alert : கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். 30 பேர் கொண்ட 10 குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக தேசிய பேரிடர் மீட்புப் படை தகவல் தெரிவித்துள்ளது.

#JUSTIN : தண்டவாளத்தில் உடைப்பு.. அலறிய பயணிகள்.. அவசரமாக நிறுத்தப்பட்ட ரயில்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த புளியமங்கலம் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் உடைப்பு.