K U M U D A M   N E W S

om

ஆம்னி பேருந்துகளுக்கு வரி கிடையாது.. நீதிமன்றம் அதிரடி அறிவிப்பு

கொரோனா ஊரடங்கின்போது இயக்கப்படாத ஆம்னி பேருந்துகளுக்கு சாலை வரி வசூலிக்கமுடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

மசூதிக்கு வெடிகுண்டு மிரட்டல்.. விசாரணையில் வெளிவந்த உண்மை

சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள மசூதிக்கு அனுஷா தயாநிதி என்ற பெயரில் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. இதைத்தொடர்ந்து வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் நடத்திய சோதனையில் அது புரளி என தெரிய வந்தது. 

தொழிற்சாலையை நவீனமயமாக்கும் ஹூண்டாய் நிறுவனம்

 காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டையில் ஹுண்டாய் நிறுவனத்தின் கார் தொழிற்சாலை 5.40 லட்சம் சதுர அடியில் செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையை கூடுதலாக 1.81 லட்சம் சதுர அடியில் நவீனமயமாக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

மழைக்கால பராமரிப்பு... செய்யக்கூடியவை! மற்றும் செய்யக்கூடாதவை!

மழைக்காலம் வந்தாலே கூடவே உடல்நலக்குறைவும் வந்துவிடும். இதற்கு இந்த காலத்தில் நமது உடல்நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம்.

அட்டை பெட்டிக்குள் பச்சை உடும்பு, கருங்குரங்குகள்.. மலேசிய நாட்டு பெண் சிக்கியது எப்படி?

மலேசியாவில் இருந்து ஆப்பிரிக்க பச்சை உடம்பு, கருங்குரங்குகளை கடத்திய மலேசிய பெண் உட்பட 2 பேரை சுங்க இலாக அதிகாரிகள் கைது செய்தனர்.

Kanguva: பிரம்மாண்டமாக நடைபெறும் கங்குவா ஆடியோ லான்ச்... சூர்யாவுக்காக ஓகே சொன்ன சூப்பர் ஸ்டார்ஸ்!

சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழா, வரும் 26ம் தேதி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. அதில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பான் இந்தியா சூப்பர் ஸ்டார் பிரபாஸ் இருவரும் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சராக பதவியேற்றார் உமர் அப்துல்லா... இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்பு!

ஜம்மு-காஷ்மீரின் முதலமைச்சராக உமர் அப்துல்லாவும், துணை முதலமைச்சர் சுரேந்தர் குமார் சவுத்ரியும் பதவியேற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் ராகுல் காந்தி, கனிமொழி உளிட்ட இந்தியா கூட்டணி தலைவர்கள் பங்கேற்றனர்.

ஒரே நாளில் கிடுகிடுவென குறைந்த தக்காளி

கனமழை காரணமாக கோயம்பேடு காய்கறி சந்தையில் நேற்று ரூ.120க்கு ஒரு கிலோ தக்காளி விற்கப்பட்ட நிலையில், வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை குறைந்து கிலோ ரூ.90க்கு விற்பனையாகிறது.  

#BREAKING: சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ் | Kumudam News 24x7

முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் வாபஸ் பெறுவதாக சாம்சங் தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.

மகாராஷ்டிரா, ஜார்கண்ட் சட்டமன்றத் தேர்தல்... தேதியை அறிவித்த இந்திய தேர்தல் ஆணையம்!

மகாராஷ்டிராவில் ஒரே கட்டமாக நவம்பர் 20ம் தேதியும், ஜார்கண்ட்டில் நவம்பர் 13, 20ம் தேதிகளில் இரு கட்டங்களாகவும் தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.