#BREAKING: Heat Waves: தமிழ்நாடு அரசு முக்கிய அறிவிப்பு
வெப்ப அலையை மாநில பேரிடராக அறிவித்து தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியீடு.
வெப்ப அலையை மாநில பேரிடராக அறிவித்து தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியீடு.
Today Headlines : 5 மணி தலைப்புச் செய்திகள் | 5 PM Today Headlines Tamil | 28-10-2024 | Kumudam News
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் காலிப் பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது. 8,932 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவித்திருந்த நிலையில் மேலும் 559 இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் இருந்து தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்காக சென்ற அக்கட்சி நிர்வாகிகள் சீனிவாசன், கலை ஆகியோர் விபத்தில் உயிரிழந்தனர். ஆனால், அவர்களுக்கு விஜய் இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என பலியானவர்களின் குடும்பத்தினர் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்க விரும்பும் கட்சிகளுக்கு, ஆட்சி, அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படும் என விஜய் கூறியிருந்தார். இதனை சுட்டிக்காட்டி திமுகவிடம், ஆட்சியில் பங்கு கேட்டுள்ளது காங்கிரஸ்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் எம்.சரவணன் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், முதலமைச்சர் தலைமையில் கூட்டணி ஆட்சி மலர்ந்தால் நல்லது, இதைதான் தமிழக மக்களும் எதிர்பார்க்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.
அஷ்டம சனி நடக்கும் வேளையில் விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார் என பிரபல ஜோதிடர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நடத்தியது மாநாடு அல்ல, பிரமாண்ட சினிமா சூட்டிங் என அமைச்சர் ரகுபதி விமர்சனம் செய்துள்ளார்.
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் தீபாவளிக்கு (அக். 31) மறுநாள் ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என விஜய் தெரிவித்திருப்பது விசிகவுக்கான சிக்னல் இல்லை. விசிகவை ஆதரிக்கும் மக்களுக்கு கொடுக்கும் சிக்னல் என அரசியல் விமர்சகர் மதூர் சத்யா தெரிவித்துள்ளார்.
திராவிட மாடல் எனக் கூறிக்கொண்டு திமுக மக்களை ஏமாற்றுவதாக, தவெக மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் விமர்சித்திருந்தார். இதற்கு அமைச்சர் மா சுப்ரமணியன் பதிலடி கொடுத்துள்ளார்.
கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.215 வழங்கப்படும் என திமுக அரசு அறிவித்திருந்தது. உடனடியாக கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையை வழங்கநடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்க விரும்பும் கட்சிகளுக்கு, தேர்தலில் வெற்றிப் பெற்றால் ஆட்சி, அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படும் என விஜய் கூறியிருந்தார். இதனால் திமுக கூட்டணியில் விரிசல் வரலாம் என அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
தவெக மாநாட்டில் பேசிய விஜய் திமுவை சாடிய நிலையில், அரசியல் விமர்சகர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.
தவெக மாநாட்டில் விஜய் பேசியது குறித்து அரசியல் விமர்சகர்கள் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டு மேடையில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டு மேடையில் விஜய் ஆவேசமாக பேசியது அக்கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. முக்கியமாக திமுக, பாஜக கட்சிகளை கடுமையாக தாக்கி பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தில் விஜய் பேசியதை முழுமையாக தற்போது பார்க்கலாம்.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டு மேடையில் அக்கட்சியின் செயல்திட்டங்களும் கொள்கைகளும் வெளியிடப்பட்டன. அதில் தவெக இருமொழிக் கொள்கையை பின்பற்றுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டு மேடையில் கெத்தாக என்ட்ரி கொடுத்த தலைவர் விஜய், தொண்டர்கள் முன்னிலையில் ரேம்ப் வால்க் சென்று மாஸ் காட்டினார். அதனைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியையும் ஏற்றி வைத்தார் விஜய். அப்போது நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை இப்போது பார்க்கலாம்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழாக்கோலம் பூண்டுள்ள நிலையில், விஜய்யின் அம்மா ஷோபா, அப்பா எஸ்.ஏ சந்திரசேகர் இருவரும் முதல் ஆளாக மாநாட்டுத் திடலுக்கு வருகை தந்துள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தற்போது நடைபெற்று வரும் நிலையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விஜய்க்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
TVK Maanadu Live: வீசி எறியப்பட்ட தண்ணீர் பாட்டில்கள்.. தவெக மாநாட்டின் அவல நிலை
தமிழக வெற்றிக் கழக மாநாடு நடைபெறும் இடத்தில் சிகரெட் விற்பனை செய்த நபர் வெளியான அதிர்ச்சி வீடியோ.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஒரு படகுடன் 12 தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
தவெக மாநாடு இன்று மாலை தொடங்கவுள்ள நிலையில் நேற்று (அக்.26) இரவு முதலே ரசிகர்களும், தவெக தொண்டர்களும் மாநாட்டுத் திடலுக்கு படையெடுக்கத் தொடங்கினர்.