K U M U D A M   N E W S

கைதிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய குழு... பதில்தர அரசுக்கு ஆணை

சிறைகளில் கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய குழு அமைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், தமிழக அரசு, மாநில மனித உரிமை ஆணையம், சிறைத் துறை அதிகாரிகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Madurai : பவுடர் பால் குடித்த குழந்தை உயிரிழப்பு - மதுரையில் நேர்ந்த சோகம்

Madurai Child Death : மதுரையில் பால் பவுடர் குடித்த 2 மாத குழந்தைக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதால் உடனடியாக மருத்துவமனை அழைத்து சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகும் கனமழை... சென்னையில் எப்படி?

Heavy Rain in Tamil Nadu : 23ம் தேதி மற்றும் 24ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

பள்ளிக்கல்வித்துறை திட்டங்களை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்

பள்ளிக்கல்வித்துறையில் செயல்படுத்தப்படும் திட்டங்களை கண்காணிக்க அதிகாரிகளை நியமித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

பழனி பஞ்சாமிர்தத்தில் கலப்படம்? பாஜக நிர்வாகிகள் மீது புகார்

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்துவதாக செய்திகள் வெளியானது. இதைத்தொடர்ந்து பழனியில் பஞ்சாமிர்தம் ஆவின் நெய்யில் தான் தயாரிக்கப்படுவதாக அறநிலையத்துறை விளக்கமளித்துள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி செல்வம் மற்றும் செல்வகுமார் என்பவர் மீது பழநி கோயில் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

Today Headlines: 07 மணி தலைப்புச் செய்திகள் | 07 AM Headlines Tamil | 21-09-2024

இன்றைய முக்கிய செய்திகள் தொகுப்பை இங்கே காணலாம்.

குளுகுளு ஊட்டியாக மாறிய சென்னை.. கொட்டித் தீர்க்கும் மழை.. மக்கள் மகிழ்ச்சி!

கடும் வெயிலில் இருந்து எப்போது விடுதலை கிடைக்கும்? என மக்கள் ஏங்கித் தவித்து வந்தனர். இந்நிலையில், சென்னை மக்களின் ஏக்கத்தை போக்கும்விதமாக நகரின் பல்வேறு இடங்களில் இன்று அதிகாலை 3.00 மணி முதல் மழை கொட்டியது.

தமிழ்நாட்டில் அனல் பறக்கப்போகுதாம்... வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் மக்களே!

தமிழகத்தில் அடுத்த 2 தினங்களுக்கு (20.09.2024 மற்றும் 21.09.2024) அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2°- 4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

குண்டர் சட்டம்... தேவையான சட்டத் திருத்தம்... தமிழக அரசுக்கு ராமதாஸ் வலியுத்தல்!

மருத்துவக் கழிவுகளை கொட்டுபவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளார்.

சட்டக்கல்லூரிகளில் முதல்வர்களே இல்லை என்றால் கல்வியின் தரம் எப்படி இருக்கும்.. - அடுக்கடுக்காக கேள்வி எழுப்பிய நீதிமன்றம்

சட்டக்கல்லூரிகளில் விரிவுரையாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பக் கோரிய வழக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்டக்கல்லூரிகளில் முதல்வர்களே இல்லை என்றால் கல்வியின் தரம் எப்படி இருக்கும் என கேள்வி எழுப்பியதுடன் உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அக்.3க்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது