K U M U D A M   N E W S

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=3150&order=created_at&post_tags=nadu

நீலகிரியில் கனமழை நீடிக்கும்.. உஷார் மக்களே.. எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தில் மேலும் 2 நாட்கள் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இன்று முதல் 1ஆம் தேதி வரை கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பறிமுதல் செய்யப்பட்ட கள்ளச்சாராயம்..4 ஆண்டுகளில் எவ்வளவு? அதிர்ச்சி ரிப்போர்ட்

கடந்த 2021 ஆண்டு ஜூன் முதல் டிசம்பர் வரை கள்ளச்சாராயம் தொடர்பாக 96,916 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 96737 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 4 ஆண்டுகளில் 4,63,710 வழக்குகளை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் பதிவு செய்துள்ளனர் என்ற அதிர்ச்சி புள்ளி விவரங்கள் குமுதம் செய்திகளுக்கு கிடைத்துள்ளது.

நீட் தேர்வு..திமுகவின் அரசியல் நாடகத்தை நம்ப மாட்டார்கள்.. கொந்தளிக்கும் எடப்பாடி

38 எம்பிக்களை வைத்துக்கொண்டு நீட் ஒழிப்புக்கு ஒரு துரும்பைக் கூட கிள்ளிப்போடாத திமுக, தற்போது 40 எம்பிக்கள் இருந்தும் நாடாளுமன்றத்தில் நீட் குறித்த தீர்மானத்தை கொண்டுவராமல், மீண்டும் 3வது முறையாக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவருவதால் என்ன பயன்? என்று சட்டசபை எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.