K U M U D A M   N E W S

BREAKING | சூட்கேஸில் பெண்ணின் உடல்: கொலையாளிக்கு கோர்ட் போட்ட உத்தரவு

சென்னை துரைப்பாக்கத்தில் பெண்ணை கொலை செய்த மணிகண்டன் என்பவருக்கு நீதிமன்றக் காவல். மணிகண்டனை அக்டோபர் 1ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைக்க ஆலந்தூர் நீதிமன்ற நீதிபதி உத்தரவு

PM Modi : ’ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சிக்கு வந்தால்..’ வாக்குறுதிகளை அள்ளிவீசிய பிரதமர் மோடி!

PM Modi Campaign in Jammu and Kashmir : ''முன்னர் ஜம்மு-காஷ்மீரில் சிலர் பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினார்கள். ஆனால் இப்போது அவர்களின் கைகளில் புத்தகங்களும், பேனாக்களும் கொடுக்கப்பட்டுள்ளன. ஏனெனில் அந்த 3 கட்சிகளின் சுயநல அரசியலை இளைஞர்கள் புரிந்து கொண்டுள்ளனர்'' என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

லஞ்ச ஒழிப்புத்துறை பிடியில் முன்னாள் அமைச்சர்.. ஊழல் வழக்கில் முதல் தகவல் அறிக்கை

536 கோடி ரூபாய் மாநகராட்சி ஒப்பந்த முறைகேடு தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் 10 சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

#BREAKING | எஸ்.பி.வேலுமணி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு

எஸ்.பி.வேலுமணி மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு

Anti Labour Scheme : தொழிலாளர் விரோத திட்டத்தை அரசு கைவிட வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

Anti Labour Scheme in Tamil Nadu : விடுமுறைக் கால சிறப்புப் பேருந்துகளை தனியார் மூலம் இயக்குவது தனியார்மயத்தின் முதல்படியே: தொழிலாளர் விரோத திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

பாலியல் புகாரில் ரகசிய விசாரணை.. உப்புமா கம்பெனியை நம்பி ஏமாறாதீர்கள் - ஆர்.கே.செல்வமணி

பெண் தொழிலாளர்கள் மீது அத்துமீறல் செய்யும் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சம்மேளனம் துணை நிற்கும் என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

காதர் பாட்ஷா கட்டுப்பாட்டில் தான் மற்ற அதிகாரிகள் கெட்டுப்போனார்கள் - Pon Manickavel

காதர் பாட்ஷா கட்டுப்பாட்டில் தான் மற்ற அதிகாரிகள் கெட்டுப்போனார்கள் - Pon Manickavel

டிஎஸ்பி காதர் பாட்ஷா கோடி கணக்கில் பணப் பட்டுவாடா.. சிலை கடத்தல் விவகாரத்தில் பகீர் குற்றச்சாட்டு

சிலை கடத்தல் கும்பலிடம் இருந்து கோடிக்கணக்கிலான பணத்தை ஒருங்கிணைத்து பணப்பட்டுவாடா செய்தவர் டிஎஸ்பி காதர் பாட்ஷா என்று முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் குற்றம் சாட்டியுள்ளார்.

#BREAKING | பரனூர் சுங்கச்சாவடி முற்றுகை - கண்ணாடி உடைப்பு

போராட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியினர் பரனூர் சுங்கச்சாவடியில் உள்ள கண்ணாடியை அடித்து உடைத்ததால் பரபரப்பு. போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கூடாது என போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

#BREAKING || விக்கிரவாண்டி சுங்கச்சாவடி முற்றுகை

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை மனிதநேய மக்கள் கட்சியினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு. சுங்க கட்டணத்தை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்தி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் போராட்டம்