K U M U D A M   N E W S

அனுமதியின்றி பள்ளி சுவற்றில் ஒட்டப்பட்ட தவெக போஸ்டர்.. பள்ளி நிர்வாகம் அதிரடி புகார்.. காவல்துறை அதிரடி நடவடிக்கை

தவெக மாநாடு நடைபெறுவதையொட்டி விளம்பரம் செய்யும் வகையில் அக்கட்சியினர் குடியாத்தம் அரசு பள்ளி சுவற்றில் அனுமதியின்றி போஸ்டர் ஒட்டினர். இதையடுத்து பள்ளி நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில் போஸ்டர்களை அகற்றி காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

தவெக மாநாடு; சிறப்புக் குழுக்கள் அமைப்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் 27ம் தேதி நடைபெற உள்ள நிலையில் மாநாட்டு பணிகளை மேற்கொள்ள 3 குழுக்களை கட்சி தலைமை அமைத்துள்ளது. 

தவெக மாநாட்டின் பூமி பூஜை..எந்த தேதியில் தெரியுமா?

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வரும் 27ம் தேதி முதல் மாநாடு நடைபெற உள்ளது. இதையொட்டி வரும் 4ம் தேதி பூமி பூஜை நடைபெறும் என தவெக அறிவித்துள்ளது

தவெக மாநாட்டுக்கு அனுமதி மறுப்பா..? வெளியான தகவல்.. எஸ்.பி. விளக்கம்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறுகிறது. இந்நிலையில் மாநாட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியான நிலையில் விழுப்புரம் எஸ்.பி விளக்கமளித்துள்ளார். 

தவெக அப்டேட்...நாளை வெளியாகும் முக்கிய அறிவிப்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக     மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்களுடன் தவெக தலைவர் விஜய் நாளை ஆலோசனை நடத்த உள்ளார். 

கோலாகலமாக நடக்க உள்ள முதல் மாநாடு.. கட்சியினருக்கு புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தல்

தவெக மாநாடு அக்டோபர் 27ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள நிலையில், மாநாட்டிற்கு வரும் கட்சியினர் மது அருந்திவிட்டு வரக்கூடாது. பெண்கள் மற்றும் பெண் காவலர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என கட்சியினருக்கு புஸ்ஸி ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார்