K U M U D A M   N E W S

#BREAKING || கல்லூரி மாணவன் மீது மர்மநபர்கள் தாக்குதல்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கல்லூரி முடிந்து வீடு திரும்பிய மாணவன் மீது மர்மநபர்கள் தாக்குதல். தனியார் பேருந்தில் அமர்ந்திருந்த மாணவனை மர்மநபர்கள் தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு - போலீசார் விசாரணை

டிசம்பருக்கு முன்பே வந்த சோகம்.. பீதியை கிளப்பிய வானிலை ஆய்வு மையம்

வடகிழக்கு பருவமழை தொடர்பாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

’இதுவர பார்த்தது ட்ரெய்லர் தான் கண்ணா..’ அதிக மழை குறித்து எச்சரிக்கும் வானிலை மையம்

அக்டோபர் மூன்றாவது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தகவல். இயல்பை விட 115 சதவீதம் கூடுதலாக மழை பெய்யக்கூடும் எனவும் கணிப்பு.

தமிழக அமைச்சரவை கூட்டம்.. வெளியான முக்கிய அறிவிப்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் அக்டோபர் 8ம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்ட நிலையில் வரும் 8ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

அக்டோபர் 8ல் தமிழக அமைச்சரவை கூட்டம்?

தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்ட பிறகு முதல்முறையாக நடக்கவிருக்கும் அமைச்சரவை கூட்டம், அக்டோபர் 8ம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகவுள்ளது.

வெளுக்கப்போகுது வடகிழக்கு பருவமழை.. வானிலை ஆய்வு மையம் கொடுத்த அலர்ட்

வடகிழக்கு பருவமழை இயல்பை விட 115 சதவீதம் கூடுதலாக பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

"ராமதாஸ் என்ன உத்தமரா..?" - ஆர்.எஸ்.பாரதி காட்டம்

அமலாக்கத்துறையின் அடாவடி நடவடிக்கையைக் கண்டிக்காத பாமக நிறுவனர் ராமதாஸ், உத்தமரா? என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பியுள்ளார். 

Thalapathy 69: விஜய்யின் தளபதி 69-ல் இணைந்த பாலிவுட் பிரபலம்... மிரட்டலாக வெளியான போஸ்டர்!

விஜய்யின் தளபதி 69 படத்தை ஹெச் வினோத் இயக்கவுள்ள நிலையில், இதில் நடிக்கும் மற்ற நடிகர்களின் அறிவிப்பை படக்குழு வெளியிட்டு வருகிறது.

மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்... தி.மலையில் உச்சக்கட்ட பரபரப்பு

திருவண்ணாமலை ஆரணி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி பழனி என்பவருக்கு உரிய சிகிச்சை வழங்கவில்லை என குற்றம் சாட்டி மருத்துவமனைக்கு எதிரே 200-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ரஜினி உடல் நிலை எப்படி உள்ளது..? அறிக்கை வெளியிட்ட மருத்துவமனை நிர்வாகம்

நடிகர் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவரின் உடல்நிலை சீராக உள்ளது. இன்னும் 2 தினங்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.