K U M U D A M   N E W S

”சிங்களர்கள், தமிழர்கள், இஸ்லாமியர்களின்...” பதவியேற்ற கையோடு இலங்கை அதிபர் சொன்ன விஷயம்..

இலங்கையின் புதிய அதிபராக வெற்றி வாகை சூடி பதவியேற்றுள்ள இடதுசாரி அதிபர் அநுர குமார திசநாயக சிங்களர்கள், தமிழர்கள், இஸ்லாமியர்களின் ஒற்றுமையே புதிய தொடக்கத்தின் அடித்தளம். ஒன்றாக இணைந்து எதிர்காலத்தை வடிவமைப்போம் என தெரிவித்துள்ளார்.

அரசு வேலை வாங்கித்தருவதாக மோசடி.. அதிமுக முன்னாள் அமைச்சர் மீது வழக்குப்பதிவு

அரசு வேலை வாங்கித்தருவாத கூறி ரூ.65 லட்சம் மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் சுப்பிரமணியன், அவரது மகள் லாவண்யா மீது சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

எல்லா காலமும் ஏமாற்ற முடியாது.. முதல்வரை சாடிய எடப்பாடி பழனிசாமி!

நான்கு முறை வெளிநாட்டு சுற்றுப் பயணம் மேற்கொண்டு குறைவான முதலீட்டை ஈர்த்த விடியா திமுக முதலமைச்சர் உடனடியாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை அதிபராக பதவியேற்றார் அநுர குமார திசநாயக

இலங்கையின் புதிய அதிபராக தேசிய மக்கள் சக்தி இயக்கத்தின் அநுர குமார திசநாயக பதவியேற்றார். இலங்கையின் முதல் இடதுசாரி அதிபர் என்ற சிறப்புடன் பதவியேற்றார்.

Lubber Pandhu Box Office : 3 நாட்களில் மெகா வசூல்... லப்பர் பந்து படத்தின் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்!

Lubber Pandhu Box Office Collection : ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் நடித்துள்ள லப்பர் பந்து படம் எதிர்பார்த்ததை விட மிகப் பெரிய வெற்றிப் பெற்றுள்ளது. முதல் மூன்று நாட்களில் லப்பர் பந்து படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறித்து வெளியான தகவல்களை பார்க்கலாம்.

32 ஆண்டுகள் கழித்தும் கோலிவுட்டை கலக்கும் விஜயகாந்தின் படம்.. ரீ-ரிலீஸில் செம்ம வசூலாம்...!

32 ஆண்டுகள் கழித்து ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட ”மாநகர காவல்” திரைப்படம் நல்ல வசூலை பெற்று வருவதாக குரு ராஜா இண்டர்நேஷனல் நிறுவனத்தின் உரிமையாளர் ராஜா தெரிவித்துள்ளார்.  

கோவைக்கு திமுக செய்த நலத்திட்டங்கள் என்ன..? மேடை போட்டு விவாதிக்க தயாரா..? சவால் விடுத்த எஸ்.பி.வேலுமணி

 கடந்த மூன்று ஆண்டுகளில் திமுக அரசு கோவை மாவட்டத்திற்கு செய்த நலத்திட்டங்களை மேடை போட்டு விவாதிக்க தயாரா என அதிமுக சார்பில் நடைபெற்ற அண்ணா பிறந்தநாள் பொது கூட்ட நிகழ்வில் ஆவேசமாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உரையாற்றினார். 

ஒத்தைக்கு ஒத்தை பேசலாம் வாங்க.. திமுகவுக்கு நேரடி அழைப்பு விடுத்த எஸ்.பி.வேலுமணி

எம்.ஜி‌.ஆர் இன்னும் 2 ஆண்டுகள் உயிரோடு இருந்திருந்தால் இலங்கையில் தமிழர்களுக்கு தனிநாடு கிடைத்திருக்கும் என அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.  சூலூர் அடுத்த கிட்டாம்பாளையத்தில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், கோவை மாவட்டத்திற்கு செய்த நலத்திட்டங்கள் குறித்து விவாதிக்க திமுக தயாரா என சவால் விடுத்தார்..

பசுமைப்பூங்கா அமைப்பது வரவேற்கத்தக்கது - அன்புமணி ராமதாஸ் கருத்து

கிண்டியில் மீட்கப்பட்ட நிலத்தில் 118 ஏக்கர் பரப்பில் பசுமைப்பூங்கா அமைப்பது வரவேற்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

திருப்பதி லட்டு சர்ச்சை..தொடங்கியது தோஷ நிவர்த்தி சாந்தி யாகம்

திருப்பதி லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு கலந்துள்ளது என்ற குற்றச்சாட்டு இந்தியா முழுவதும் பேசும்பொருளாகியுள்ளது. இந்நிலையில் இதன் ஒரு பகுதியாக ஏழுமலையான் கோயிலில் சாந்தி யாகம் தொடங்கியது.

LIVE | ஏழுமலையான் கோயிலில் சாந்தி யாகம் தொடங்கியது

திருப்பதி லட்டில் கலப்படம் செய்யப்பட்ட விவகாரம் - ஏழுமலையான் கோயிலில் சாந்தி யாகம் தொடங்கியது. திருப்பதி லட்டு தயாரிக்க வாங்கப்பட்ட நெய்யில் விலங்கு கொழுப்பு கலக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையானது

Srilanka Elections 2024: அதிபர் தேர்தலில் அபார வெற்றிஅநுர குமார திசநாயக நெகிழ்ச்சி பதிவு

இலங்கையின் வரலாற்றை மீண்டும் எழுதத் தயாராக நிற்கிறோம் என புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள அநுர குமார திசநாயக எக்ஸ் தளத்தில் பதிவு...

இலங்கையில் முதல் இடதுசாரி ஆட்சி..அதிபர் அநுர குமார திசநாயகவின் வரலாறு..

இலங்கையின் புதிய அதிபராக வெற்றி வாகை சூடியுள்ளார் தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அநுர குமார திசநாயக. இடதுசாரி கொள்கையைப் பின்பற்றி அவர் கடந்து வந்த வாழ்க்கைப் பயணம் குறித்து விலக்குகிறது இக்கட்டுரை..

ஸ்டாலின் முடிவு சரியானது... அடுத்து உதயநிதி வந்தால்..... ஜவாஹீருல்லா உற்சாகம்!

உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வர் ஆக்குவது இளைய தலைமுறையினர் அரசியலில் வருவதற்கும் சாதிப்பதற்கும் வழிவகுக்கும் என மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹீருல்லா கருத்து தெரிவித்துள்ளார்

தலைவிரித்தாடும் நிபா வைரஸ் தொற்று.. கேரளாவில் மீண்டும் 2 பேர் பாதிப்பு!

கேரளாவில் மீண்டும் 2 பேர் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

ஏழுமலையானிடம் மன்னிப்பு கேட்கபோறேன் - Pawan Kalyan !

Pawan Kalyan on Tirupati Laddu Issue : திருப்பதி கோயில் பிரசாதமான லட்டில் விலங்குகளில் கொழுப்புகள் உள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து ஏழுமலையானிடம் மன்னிப்பு கேட்பதாக ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார்.

செஸ் ஒலிம்பியாட்: தங்கம் வென்று சாதனை.. டீம் இந்தியாவிற்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

ஹங்கேரியில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ள இந்திய செஸ் வீரர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Srilanka Election: இலங்கையின் 9வது அதிபராகும் அநுர குமார திசநாயக... புதிய வரலாற்று சாதனை!

இலங்கை அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் அநுர குமார திசநாயக வெற்றிப் பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Meiyazhagan: “மெய்யழகன் படத்த விமர்சிக்க வேண்டாம்... வசூல் பத்தி கவலைபடாதீங்க..” சூர்யா சொன்ன சீக்ரெட்!

கார்த்தி, அரவிந்த் சாமி நடித்துள்ள மெய்யழகன் திரைப்படம் வரும் 27ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறித்து சூர்யா பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

மதுவிலக்கு மாநாடு.. பாராட்ட ஆளில்லை.. திருமாவளவன் வேதனை!

கூட்டணியில் இருந்து கொண்டு மதுவிலக்கு மாநாட்டை நடத்த இருக்கிறாரே என பாராட்ட ஆளில்லை என விசிக தலைவர் திருமாவளவன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

Srilanka's New President: இலங்கை அதிபராகிறார் அநுர குமார திசநாயக!

Srilanka's New President: இலங்கையின் புதிய அதிபராகிறார் அநுர குமார திசநாயக.

Lubber Pandhu Box Office: சீன் பை சீன் சிக்ஸர் மழை... பாக்ஸ் ஆபிஸ் வசூலில் மிரட்டும் லப்பர் பந்து!

ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் நடித்துள்ள லப்பர் பந்து திரைப்படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து இப்போது பார்க்கலாம்.

என்கவுண்டர் நல்லதல்ல.. விஜய் அரசியல் Wait பண்ணி பார்ப்போம்.. கே. பாலகிருஷ்ணன்

என்கவுண்டர் தமிழகத்தில் அதிகரித்து வருவது தமிழக நலனுக்கு நல்லதல்ல என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) CPIM மாநில தலைவர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

TVK Vijay: “விஜய் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து சொல்லல... இது லாஜிக்கே இல்ல..” எல் முருகன் அட்டாக்!

விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காத விஜய்யின் அரசியல் பயணம், முதல் கோணல் முற்றிலும் கோணல் என்பதைப் போல உள்ளதாக மத்திய அமைச்சர் எல் முருகன் விமர்சித்துள்ளார்.