K U M U D A M   N E W S

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=17625&order=created_at&post_tags=k

நதிகள் சீரமைப்பு.. முதலமைச்சர் ஆலோசனை

சென்னையில் உள்ள நதிகள் சீரமைப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்

சதத்தை தவற விட்ட ஜடேஜா.. இந்தியா 376 ரன்கள் குவிப்பு.. தடுமாறும் வங்கதேசம்!

சதம் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜடேஜா 86 ரன்னில் தஸ்கின் அகமது பந்தில் லிட்டன் தாஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதன் பிறகு சிறிது நேரத்தில் சத நாயகன் அஸ்வினும் (133 பந்தில் 113 ரன்கள்) அவுட்டாகி வெளியேறினார்.

அதிமுகவினர் மீது பொய் வழக்கு... கொந்தளித்த எடப்பாடி பழனிசாமி...

அதிமுகவினர் மீது பொய் வழக்கு போட்டு திமுக அரசு முடக்க நினைப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

கோவையில் 57 ஸ்பாக்கள் மூடல்

கோவை மாநகர பகுதியில் அனுமதியின்றி செயல்பட்டதாக 57 மசாஜ் செண்டர்கள் மற்றும் ஸ்பாக்கள் கடந்த 5 நாட்களில் மூடப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

#Breaking: அக்டோபர் 27-ல் த.வெ.க மாநாடு

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு அக்டோபர் 27ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

கேரளாவில் வெடித்த சர்ச்சை.., 20 நடிகைகளுக்கு நடந்த சோகம்

கேரளாவில் பூதாகரமாக வெடித்துள்ள நடிகைகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், மேலும் அதிர்ச்சியளிக்கும் விதமாக 20 நடிகைகளுக்கு மிக மோசமான பாலியல் கொடுமை நடந்திருக்கும் அதிர்ச்சி தகவல் வெளிவந்திருக்கிறது.

இன்றோடு 100 ஆண்டுகள் கடந்தன.., ஜான் மார்ஷலுக்கு முதலமைச்சர் நன்றி

"சிந்து சமவெளி நாகரிகம் குறித்து ஜான் மார்ஷல் அறிவித்து இன்றோடு 100 ஆண்டுகள் ஆன நிலையில் நன்றியுடன் நினைவு கூர்கிறேன். சிந்து சமவெளி நாகரிகத்தில் திராவிடத்தின் பங்கு குறித்தும் தெரிவித்திருந்த ஜான் மார்ஷலுக்கு நன்றி - முதலமைச்சர் X தளத்தில் பதிவு

”இதனால் திமுகவின் சீனியர்கள் தான் கவலைப்பட வேண்டும்” - கடம்பூர் ராஜு கடும் தாக்கு

உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுப்பதற்கு திமுகவில் உள்ள சீனியர்கள் தான் கவலைப்பட வேண்டும் என வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்

"உதயநிதிஸ்டாலினுக்கு உரிய நேரத்தில் துணை முதல்வர் பதவி"-அமைச்சர் செஞ்சி மஸ்தான்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உரிய நேரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் பதவியை வழங்குவார் - கோவையில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேட்டி

லட்டில் விலங்கு கொழுப்பு!! - ஆடிப்போன இந்தியர்கள்.. "உண்மையா..?"

லட்டில் விலங்கு கொழுப்பு!! - ஆடிப்போன இந்தியர்கள்.. "உண்மையா..?"

சூட்கேஸுக்குள் பெண்ணின் சடலம்... சிக்கிய இளைஞருக்கு காப்பு

சூட்கேஸுக்குள் பெண்ணின் சடலம்... சிக்கிய இளைஞருக்கு காப்பு

பயிரை மேய்ந்த வேலி; ஹவாலா பணம் கொள்ளையில் தலைமைக் காவலருக்கு காப்பு!

பயிரை மேய்ந்த வேலி; ஹவாலா பணம் கொள்ளையில் தலைமைக் காவலருக்கு காப்பு!

#BREAKING || தேடப்படும் குற்றவாளியாக ரவுடி சீசிங் ராஜா

தேடப்படும் குற்றவாளியாக ரவுடி சீசிங் ராஜாவை தாம்பரம் காவல் ஆணையரகம் அறிவித்துள்ளது.

#BREAKING | தீட்சிதர்கள் விற்ற நிலம் - நீதிமன்றம் உத்தரவு

சிதம்பரம் தீட்சிதர்கள் விற்பனை செய்த நிலம் தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

லப்பர் பந்து, நந்தன், கோழிப்பண்ணை செல்லத்துரை... இந்த வாரம் தியேட்டரில் வெளியாகும் 6 படங்கள்!

இந்த வாரம் திரையரங்குகளில் 6 தமிழ்ப் படங்கள் வெளியாகவுள்ளன. இதில், எந்தப் படத்துக்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்துள்ளது என இப்போது பார்க்கலாம்.

வங்கதேச பவுலர்களுக்கு தண்ணி காட்டிய GOATஅஸ்வின்.. அதிரடி சதத்திற்கு பிறகு சொன்னது இதுதான்!

அதிரடியாக விளையாடிய அஸ்வின் சொந்த ஊர் மக்கள் முன்னிலையில் டெஸ்ட்டில் 6வது சதம் (102 ரன்) அடித்து சாதனை படைத்தார். மொத்தம் 10 பவுண்டரிகள் ஓடவிட்ட அவர் 2 சிக்சர்களையும் விளாசினார்

Vettaiyan: வேட்டையன் படத்தில் அமிதாப் பச்சன் கேரக்டர்... Wow! செம மாஸ்ஸாக வெளியான கிளிம்ப்ஸ் வீடியோ!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் வேட்டையன் படத்தில் இருந்து அமிதாப் பச்சனின் கேரக்டர் கிளிப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

#BREAKING || தேவநாதனுக்கு 4 நாட்கள் போலீஸ் காவல்

நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதனை 4 நாள் காவலில் எடுத்து விசாரிக்க பொருளாதார குற்றப்பிரிவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் வான்வழி தாக்குதல்.. அடி மேல் அடியால் கதிகலங்கிய லெபனான்!

லெபனான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியுள்ள சம்பவம் உலக நாடுகளை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.

’திமுகவை வழிநடத்த உதயநிதி ஸ்டாலின் ரெடி’..அமைச்சர் ராமச்சந்திரன் பேச்சு!

''மக்களவைத் தேர்தலில் திமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என முதல்வர் ஸ்டாலின் கூறியபோது கூட்டணிக் கட்சியினரே சந்தேகப்பட்டனர். ஆனால் வெற்றி பெற்றோம். தற்போது வரும் சட்டப்பேரவை தேர்தலில் 200 தொகுதிகளில் நாம் வெற்றி பெற வேண்டும் என முதல்வர் கூறியிருக்கிறார்'' என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் கூறியுள்ளார்.

தாய் கையால் குழந்தைகளுக்கு விஷம்... தென்காசியில் நடந்த பயங்கரம்..

தென்காசி ஆழ்வார்குறிச்சி அருகே அரளி விதையை சாப்பிட்டு 3 குழந்தைகளுடன் தாய் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அதில் ஒரு சிறுவன் பலியான நிலையில் தாய் மற்றும் 2 சிறுவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

குரூப்-4 தேர்வு... திமுக அரசு மெத்தனப்போக்கு... சீமான் கண்டனம்!

குரூப்-4 தேர்வு மூலம் ஆண்டுதோறும் 30 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்தியாவில் இரண்டாவது குரங்கம்மை பாதிப்பு... அச்சத்தில் பொதுமக்கள்!

துபாயில் இருந்து கேரளாவிற்கு வந்த 38 வயதுடைய நபர் ஒருவருக்கு குரங்கம்மை இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

எலான் மஸ்க் நிறுவனத்தின் Blindsight Device... பெருமைப்படுத்திய அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம்!

எலான் மஸ்க்கின் நியூராலிங்க் நிறுவனம் கண்டுபிடித்துள்ள பிலைண்ட் சைட் டிவைஸ் (Blindsight Device) சாதனத்தை “திருப்புமுனை சாதனம்” என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் பெருமைப்படுத்தியுள்ளது.