K U M U D A M   N E W S

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=14900&order=created_at&post_tags=k

வெளிநாட்டில் வேலை.. பணத்தை ஏமாந்த மக்கள்.. ஏஜெண்டும் புகார் கொடுத்ததால் பரபரப்பு

கனடாவில் செயல்பட்டு வரும் உணவகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி லட்சகணக்கில் பணத்தை மோசடி செய்த ஏஜெண்ட் மீது பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுக்க வந்த நிலையில் ஏஜெண்டும் புகார் கொடுக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

புதிய குற்றவியல் சட்டங்கள்.. 15 நாட்களில் மக்கள் கருத்துகளை தெரிவிக்க அறிவுறுத்தல்

புதிய குற்றவியல் சட்டங்கள் தொடர்பாக பொதுமக்கள் 15 நாட்களில் தங்களின் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி எம்.சத்யநாராயணன் தலைமையிலான  ஒருநபர் குழு அறிவித்துள்ளது. 

காவலர்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசு - முதலமைச்சர் அதிரடி

காவல்துறை, சீருடை அலுவலர்கள், பணியாளர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.

ராசிபுரத்தில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி..ஆன இளைஞர்கள்

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் முதல்முறையாக ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி.

ஜல்லிக்கட்டு தடுப்பு கட்டைகளை வெட்டிய பிரபல நடிகரின் மனைவி

மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டுக்காக அமைக்கப்பட்ட தடுப்பு கட்டைகளை அரிவாளால் வெட்டிய நடிகரின் மனைவி.

சோனாமார்க் சுரங்கப்பாதையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி

ஜம்முகாஷ்மீர் - லடாக் பகுதிகளை இணைக்கும் சோனாமார்க் சுரங்கப்பாதையை திறந்து வைத்தார் பிரதமர் மோடி.

திமுக ஆட்சியில் மேலும் பல "சார்கள்" - EPS தாக்கு

"சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குள் ஒருவர் புகுந்து பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவத்தால் அதிர்ச்சி"

பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. திமுக ஆட்சியில் பல ‘சார்’கள் உருவாகிக்  கொண்டிருப்பதாக பழனிசாமி குற்றச்சாட்டு

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண் நோயாளி ஒருவருக்கு இளைஞர் பாலியல் தொல்லை கொடுத்த நிலையில் திமுக ஆட்சியில் பல ‘சார்’கள் உருவாகிக்  கொண்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

குமரி மாவட்ட மீனவர்கள் 10 பேர் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 10க்கும் மேற்பட்டோர் டிகோகார்ஷியா தீவு கடற்படையினரால் கைது.

அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. கையும் களவுமாக பிடிபட்ட போதை ஆசாமி

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண்கள் வார்டில் புகுந்து 50 வயது பெண் நோயாளியிடம் போதை ஆசாமி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஜல்லிக்கட்டு - இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரம்

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டிக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரம்.

நீங்கள் சாதித்துள்ளீர்கள்.. நடிகர் அஜித்திற்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த்

துபாயில் நடைபெற்ற கார் ரேஸில் அஜித்தின் ரேஸிங் அணி கலந்து கொண்டு 3-ஆவது இடம் பிடித்து சாதனை படைத்த நிலையில் அஜித்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

"இனி நாம தான்" வெளிநாட்டில் வெற்றியை பதித்த அஜித் !

துபாயில் நடைபெற்ற 24H சீரிஸ் கார் பந்தயத்தில் இந்தியா சார்பில் பங்கேற்ற அஜித்குமார் அணி 3-வது இடம்

அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் எழுதிய முக்கிய கடிதம்

இன்று காலை தமிழக மீனவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் முதலமைச்சர் கடிதம்.

என்ன ஒரு கம்பேக்.. கார் ரேஸில் சாதனை படைத்து துபாயில் மாஸ் காட்டிய அஜித்

துபாயில் நடைபெற்ற 24H கார் ரேஸ் 991 பிரிவில் அஜித் குமாரின் ரேஸிங் அணி கலந்து கொண்டு 3-ஆவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

இடைத்தேர்தலை புறக்கணிப்பதால் மக்களிடம் இருந்து அதிமுக அன்னியப்பட்டு போகாது- கெளதமி

அதிமுக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் கௌதமி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதால் மக்களிடம் இருந்து நாங்கள் அன்னியப்பட்டு போக மாட்டோம் என்று தெரிவித்துள்ளார். 

சூனாபானா கேரக்டர்தான்..  11 தோல்வி பழனிசாமி.. அமைச்சர் எ.வ.வேலு விமர்சனம்

‘கோபால் என்னை போல தைரியமான ஆளா… பயந்தவன் தானே. விரட்டி விரட்டி வெட்டினது எல்லாம் ஞாபகத்துக்கு வந்து போகும் இல்லையா’ என வடிவேலுவின் சூனாபானா கேரக்டர்தான் பழனிசாமி என்று அமைச்சர் எ.வ.வேலு கடுமையாக விமர்சித்துள்ளார்.

"தமிழ் நம்மை இணைக்கும் தொப்புள் கொடி" - முதலமைச்சர் பேச்சு

அயலக தமிழர் தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை

உழவர் சந்தையில் காய்கறிகளை வாங்க குவிந்த மக்கள்

பொங்கல் மற்றும் திருவாதிரை பண்டிகையை முன்னிட்டு கரூர் உழவர் சந்தையில் காய்கறிகளை வாங்க திரண்ட பொதுமக்கள்.

அதிமுகவை தொடர்ந்து புறக்கணித்து வரும் ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள்- அமைச்சர் சாமிநாதன்

ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் அதிமுகவை தொடர்ச்சியாக புறக்கணித்து வரும் நிலையில் இந்த தேர்தலிலும் புறக்கணித்து விடுவார்கள் என்பதால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

"நீ தங்கக் கட்டி சிங்கக் குட்டி" - தயாரானது சூரியின் காளை - மிரட்டலான வீடியோ

ஜல்லிக்கட்டு போட்டிக்கு தயாராகும் நடிகர் சூரியின் காளை.

விடிந்ததும் பகீர்..!! 8 பேர் அதிரடி கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.

"அவருக்கு அருகதையே கிடையாது" - எகிறி அடித்த அமைச்சர் எ.வ. வேலு

இடைத்தேர்தலில் போட்டியிடாத ஈபிஎஸ் 2026 தேர்தலுக்காவது வருவாரா?

தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.. 20-ஆம் தேதிக்குள் விரிவான பட்டியலை வழங்க அறிவுறுத்தல்

தமிழக வெற்றிக் கழக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில் வரும் 20-ஆம் தேதிக்குள் உட்கட்டமைப்பு நிர்வாகிகளை நியமனம் செய்வது தொடர்பான விரிவான பட்டியலை வழங்க வேண்டும்  என்று மாவட்ட பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

விக்கிரவாண்டி: சிறுமிக்கு ரூ.5 லட்சம் வழங்க உத்தரவு.. கைதான மூவருக்கு ஜாமின்

விழுப்புரம் மாவட்டத்தில் மூன்று வயது சிறுமி, பள்ளி கழிவு நீர் தொட்டில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவத்தில் பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வர் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஐந்து லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம் கைதான மூவருக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.