K U M U D A M   N E W S

k

Devara: ரிலீஸுக்கு முன்பே 100 கோடி வசூல்..? பாக்ஸ் ஆபிஸில் மாஸ் காட்டும் ஜூனியர் என்டிஆரின் தேவரா!

Actor Junior NTR Devara Movie Box Office Collection : ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள தேவரா திரைப்படம் வரும் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Thiruchendur : முருகனை தரிசிக்க ரூ.1,000 கட்டணம்.. அதிர்ச்சியில் பக்தர்கள்..

Thiruchendur Murugan Temple Darshan Ticket Price : திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் விரைவு தரிசனத்திற்கு சிறப்பு கட்டணம் ரூ.1,000 ஆக கோயில் நிர்வாகம் நிர்ணயித்துள்ளது. ரூ.100-க்கு மேல் தரிசன கட்டணம் வசூலிக்கக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் கோயில் நிர்வாகம் விதித்துள்ள கட்டணம் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

காரில் இருந்த 5 சடலங்கள்.. வெளியான பகீர் தகவல்

புதுக்கோட்டை நமணசமுத்திரம் அருகே காரில் இருந்து 5 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் தொழிலில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரும் தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட தகவல் கிடைத்துள்ளது.

Lipstick Issue : நானும் லிப் ஸ்டிக் போடப் போறேன்.. மாதவிக்கு ஆதரவாக களமிறங்கி கவுன்சிலர் உமா ஆனந்தன்

Lipstick Issue in Ripon Building at Chennai : அடுத்த முறை நானும் பளிச்சென்று லிப் ஸ்டிக் போட்டு மாநகராட்சி கூட்டத்திற்கு செல்ல இருக்கிறேன் என்று பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

AR Murugadoss Net Worth : சூப்பர் ஸ்டார்களின் இயக்குநர்... AR முருகதாஸ் சொத்து மதிப்பு இத்தனை கோடியா..?

Director AR Murugadoss Net Worth 2024 : இயக்குநர் ஏஆர் முருகதாஸ், இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனையடுத்து அவருக்கு பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஏஆர் முருகதாஸின் சொத்து மதிப்பு குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

Duffedar Madhavi Transfer : லிப் ஸ்டிக் பூசியதால் டிரான்ஸ்ஃபர்!.. சென்னையின் முதல் பெண் டபேதார் மாதவி கதறல்

First Women Duffedar Madhavi Transfer in Chennai : அதிக லிப்ஸ்டிக் பூசி வந்ததால் தன்னை பணியிட மாற்றம் செய்தார்கள் என சென்னை மாநகராட்சியின் முதல் டபேதார் மாதவி குற்றம் சாட்டியுள்ளார்.

Harry Brook : இவ்வளவு சின்ன வயசிலேயே இப்படி ஒரு சாதனை!.. இங்கிலாந்து கேப்டன் அபாரம்

Harry Brook New Record : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சதம் விளாசியதன் மூலம் இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் அபார சாதனை படைத்துள்ளார்.

ஜம்மு காஷ்மீரில் 2ம் கட்டத் தேர்தல்.. விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு

ஜம்மு–காஷ்மீரில் சட்டமன்ற தேர்தலின் 2ம் கட்ட வாக்குப்பதிவு 26 தொகுதிகளுக்கு இன்று காலை  தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள். 

லிப்ஸ்டிக் போட்டது குத்தமா? பெண் ஊழியர் மீது நடவடிக்கை

சென்னை மாநகராட்சியின் முதல் பெண் டபேதாராக இருந்த மாதவி, மணலிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். பணிக்கு உரிய நேரத்தில் வருவதில்லை என்பதால் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தவெக அப்டேட்...நாளை வெளியாகும் முக்கிய அறிவிப்பு

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27ம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இதுதொடர்பாக     மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்களுடன் தவெக தலைவர் விஜய் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.