K U M U D A M   N E W S

த.வெ.க.வில் இணையும் அதிமுக முக்கியப்புள்ளி?.. இபிஎஸ் கொடுத்த பதில்

அதிமுகவின் அமைப்புச் செயலாளராக இருக்கும் செஞ்சி ராமச்சந்திரன் விஜய்யின் தவெக கட்சியில் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளதாக செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முற்றிலும் பொய்யானது என தெரிவித்துள்ளார் 

சபாநாயகர் அப்பாவு நேரில் ஆஜராக உத்தரவு

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சபாநாயகர் அப்பாவு நேரில் ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது

'நாட்டு நாட்டு..' பாடல் பின்னணியில் தெறிக்க விடும் கமலா ஹாரிஸ்.. பட்டைய கிளப்பும் பிரசார வீடியோ!

கமலா ஹாரிஸ் கெத்தாக நடந்து வருவது, பிரசார பொதுக்கூட்டத்தில் மக்களை பார்த்து கையசைப்பது, கூட்டத்தினர் மத்தியில் உரையாற்றுவது போன்ற காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளன.

GOAT: விஜய்யின் கோட் படம் பார்த்தாரா அஜித்..? வெங்கட் பிரபுவுக்கு போன சூப்பர் மெசேஜ்!

விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கியுள்ள கோட் திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. இப்படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு அஜித்திடம் இருந்து குட் நியூஸ் சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

'இந்துக்கள் அல்லாதவர்கள் நுழைய தடை'.. கிராமங்களில் அறிவிப்பு பலகையால் சர்ச்சை!

''நாட்டின் ஒற்றுமையை சீர்குலைக்கும் நபர்கள் மீது உடனுக்குடன் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற சம்பவங்களை நிரந்தரமாக தடுத்து நிறுத்த முடியும்'' என்று பல்வேறு தரப்பினர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தேசிய கல்விக்கொள்கையை கட்டாயமாக்க மத்திய அரசு முயற்சிக்கிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

தேசிய கல்விக்கொள்கையை கட்டாயமாக்க மத்திய அரசு முயற்சிக்கிறது. தேசிய கல்விக்கொள்கையை மறுப்பதால் மாநிலங்களுக்கு நிதி மறுக்கப்படுகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

GOAT Box Office Collection : பாக்ஸ் ஆபிஸில் சரிவை சந்திக்கும் கோட்... விஜய்யை கைவிட்ட ரசிகர்கள்..?

Actor Vijay Movie The GOAT Box Office Collection Report in Tamil : விஜய் நடித்துள்ள கோட் படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தின் 4வது நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகா விஷ்ணுவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் - H.ராஜா

ஆன்மிக பேச்சாளர் மகாவிஷ்ணுவை முதலில் விடுதலை செய்யவேண்டும் என பாஜக மூத்த தலைவர் எச். ராஜா தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், திருக்குறளை சுட்டிக்காட்டி ஒழுக்கம் பற்றி பேசியதால் தான், ஒழுக்கமற்ற திமுகவினர் ஆவேசம் அடைந்து அவரை தீவிரவாதி போல் கைது செய்திருப்பதாகவும் குற்றம்சாட்டினார். 

திமுகவில் வரப்போகும் அதிரடி மாற்றம்.. அமெரிக்காவில் இருந்து மு.க.ஸ்டாலின் ஆலோசனை.. உதயநிதி சொல்வது என்ன?

அமெரிக்காவில் கையெழுத்தாகும் முதலீடுகள் குறித்து ஒருங்கிணைப்புக்குழுவினரிடம் முதல்வர் ஸ்டாலின் தகவல்களை பகிர்ந்து கொண்டார். அமெரிக்கவாழ் தமிழர்கள் அளித்த வரவேற்பு பற்றியும், முதலீட்டாளர்களுக்கு தமிழ்நாட்டில் நடைபெறும் ஆட்சி பற்றித் தெரிந்திருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

மிளகாய் பொடி தூவி சரமாரியாக வெட்டிக் கொன்ற அண்ணன்.. நில தகராறில் வீட்டிற்கு தீ வைப்பு

கிருஷ்ணகிரி அருகே சின்னபாறையூர் கிராமத்தில் நிலத்தகராறில் தம்பியை வெட்டிக்கொண்ற அண்ணன், வீட்டிற்கும் தீ வைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.