Today Headlines : 03 மணி தலைப்புச் செய்திகள் | 03 PM Today Headlines Tamil | 25-10-2024
03 மணி தலைப்புச் செய்திகள்
03 மணி தலைப்புச் செய்திகள்
வடிகால்வாய்களை முறையாக தூர்வாரததால் மழைநீர் தேங்கியுள்ளதாக பொதுமக்கள் புகார்.
சென்னையில் பயணி தாக்கியதில் பேருந்தில் இருந்து விழுந்து உயிரிழந்த அரசுப்பேருந்து நடத்துநரின் குடும்பத்துக்கு நிதி.
தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் ராகிங்கில் ஈடுபட்ட 5ம் ஆண்டு மாணவர்கள்.
01 மணி தலைப்புச் செய்திகள்
திருப்பத்தூர் அருகே காமராஜ்நாடு பகுதியில் பாலம் அமைத்து தரக்கோரி பள்ளி, கல்லூரி மாணவர்கள் போராட்டம்.
தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்படவில்லை என்றும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக மைக் சரியாக வேலை செய்யவில்லை எனவும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் கொடுத்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து மீண்டும் மீண்டும் தவறாக பாடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் டென்ஷனான துணை முதலமைச்சர் உதயநிதி, தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.
தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்பட்டுள்ள நீரால் கரையோற மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து தவறாக பாடப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்தை மீண்டும் பாடச்சொல்லி ஊழியர்களை முறைக்க, அவர்கள் மீண்டும் தவறாக பாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சென்னை டிடிகே சாலையில் உள்ள ராஜ் பார்க் நட்சத்திர விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல்
கரையை கடந்தது டானா புயல், தாம்ரா, பத்ராக் பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழை போன்ற முக்கிய செய்திகள் காண
பயணி தாக்கியதில் நடத்துநர் ஜெகன் குமார் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தென்காசி, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிக கனமழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
ஒடிசா அருகே கரையை கடந்தது டானா புயல்
வாக்குச் சாவடிகள் மறுசீரமைப்பு தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம், மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு கடிதம்
Today Headlines : 09 மணி தலைப்புச் செய்திகள் | 09 PM Headlines Tamil | 24-10-2024
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழை. கனமழை காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் சிரமம்
இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து அணி முதல் நாளில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 259 ரன்கள் எடுத்துள்ளது.
ராமேஸ்வரத்தை சேர்ந்த 16 மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. அவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
முதலமைச்சர், துணை முதலமைச்சர் மீது வழக்குப்பதிய அனுமதி கேட்டு ஆளுநருக்கு தமிழக பாஜக கடிதம் எழுதியுள்ளது. அந்த கடிதத்தை ஆளுநரை சந்தித்து பாஜக செயலாளர் அஸ்வத்தமன் வழங்கினார்.
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே கழிவுநீருடன் மழைநீர் கலந்து வீடுகளுக்குள் புகுந்ததால் மக்கள் அவதியடைந்துள்ளனர். நெடுஞ்சாலைத்துறை வடிகால் வசதி ஏற்படுத்தாததால் குடியிருப்புக்குள் மழைநீர் தேங்குவதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.