K U M U D A M   N E W S

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=10600&order=created_at&post_tags=in

Bloddy Begger: ”கவின் வேண்டாம்ன்னு சொன்னேன்..” பிளடி பெக்கர் மேடையில் நெல்சன் ஓபன் டாக்!

கவின் நடித்துள்ள பிளடி பெக்கர் திரைப்படம் தீபாவளி தினத்தில் வெளியாகிறது. இந்தப் படத்தில் கவின் நடிப்பு குறித்து இயக்குநர் நெல்சன் திலீப்குமார் பேசியது வைரலாகி வருகிறது.

தமிழிசை சௌந்தரராஜனுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி

எவ்வளவு சத்தமிட்டாலும் தமிழ்நாட்டில் அரசியலும் ஆன்மீகமும் என்றும் கலக்கப் போவதில்லை என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் கனமழை.. நாளை மறுநாள் மீண்டும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி

வங்கக்கடலில் ஒரு நாள் முன்கூட்டியே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாகவும், பின்னர் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு

திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய 2 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பட்டா கேட்டு போராட்டம்.. அமைச்சர் மூர்த்தி விமர்சனம்

பட்டா கேட்டு பெண்களை திரட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்திய நிலையில், புகழுக்காக தகுதியில்லாதவர்களுக்கு பட்டா வாங்கி தருவதாக கூறி ஏமாற்றுபவர்களை நம்ப வேண்டாம் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

வெளுக்கப்போகும் கனமழை.... லிஸ்டில் உங்க மாவட்டம் இருக்கா?

வடதமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று (அக். 19) 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோயம்பேட்டில் தேங்கி நிற்கும் மழைநீர்.. அதிருப்தியில் வியாபாரிகள்

கோயம்பேடு மார்க்கெட்டில் மழைநீர் அப்புறப்படுத்தப்படாமல் இருப்பதால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

முதலமைச்சர் தொகுதியில் இப்படி ஒரு அவலமா..? - மக்கள் கடும் வேதனை

சென்னை கொளத்தூர் பகவதி அம்மாள் தெருவில் மழைநீர் வடியாமல் சாலையில் தேங்கி நிற்கிறது. அதனுடன் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை உறுதி! - துணை முதல்வர் கொடுத்த ஹாட் அப்டேட்

விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் கருணாநிதிக்கு இருந்த அனைத்து போர் குணங்களையும் திறன்களையும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Dhanush: தனுஷ் – ஐஸ்வர்யா விவகாரத்து வழக்கு மீண்டும் ஒத்தி வைப்பு... அப்போ அதுதான் உண்மையா?

நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா விவகாரத்து கோரிய வழக்கில், இருவரும் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராகாதது ரசிகர்கள் மத்தியில் புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாயின் கண் முன்னே உடல் நசுங்கி பலியான மகன்.. நடுரோட்டில் கதறி அழுத குடும்பம்

திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே சாலை விபத்தில் தாயின் கண் முன்னே மகன் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் காயமடைந்த தாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வன்மத்தை கக்குகிறார் ஸ்டாலின்... திமுகவினர் திராணியற்றவர்கள்... எல்.முருகன் கடும் சாடல்!

பொதிகை என இருந்த சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பெயரை டிடி தமிழ் என பெயர் மாற்றம் செய்து சாதனை படைத்தது பாஜக அரசு தான் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

GOAT: விஜய்யின் கோட் படம் பார்த்த ரஜினிகாந்த்... “நன்றி தலைவா..” எமோஷனலான வெங்கட் பிரபு!

விஜய்யின் கோட் திரைப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டியதாக இயக்குநர் வெங்கட் பிரபு ட்வீட் போட்டு ரசிகர்களுக்கு கூஸ்பம்ஸ் கொடுத்துள்ளார்.

தென் மாநில காவல்துறை இயக்குனர்கள் ஒருங்கிணைப்பு மாநாட்டில் முதலமைச்சர் உரை

தென் மாநில காவல்துறை இயக்குனர்கள் ஒருங்கிணைப்பு மாநாட்டில் கலந்து கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

20ம் தேதி முதல் பேராபத்து நிச்சயம்.. ஆட்டம் காட்டப்போகும் இயற்கை..

வங்கக்கடலில் வரும் 22ம் தேதி மீண்டும் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனவும், வரும் 24ஆம் தேதி அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: இருதயக் கூடு எரிகிறது.. கவிஞர் வைரமுத்து ஆக்ரோஷம்!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை தவறாக பாடியதற்கு கவிப்பேரரசு வைரமுத்து கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியை டார்கெட் செய்த கனமழை - விடிந்ததும் விழு பிதுங்கும் மக்கள்

புதுச்சேரியில் பரவலாக அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது.

ராணிப்பேட்டை; அதிகாலை முதல் பரவலாக மழை ராணிப்பேட்டை |

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அதிகாலை முதல் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

ஆளுநரைத் திரும்பப் பேற வேண்டும்; அரசியல் தலைவர்கள் ஆவேசம்!

தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலை திருத்துவதற்கு உரிமையில்லை, ஆளுநரை திரும்பப் பெறுக என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

#JUSTIN || 10 மணிக்கு "கண்டம்" - அபாய மணி அடித்த வானிலை மையம்

தமிழகத்தில் 21 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று காலை 10 மணிவரை இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு.

பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை - விடிந்ததும் வந்த அறிவிப்பு

கனமழை காரணமாக புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை.

06 AM Speed News | விரைவுச் செய்திகள் | 19-10-2024

விரைவுச் செய்திகள்

"விடமாட்டேன்.." மீண்டும் சுழலும் கடல்.. இரவில் வெளுக்கும் கனமழை..

சென்னை மற்றும் புறநகரில் இரவில் கொட்டி தீர்த்த கனமழை.

தமிழ் தாய் வாழ்த்தில் பிழை எப்படி..? - கொதித்த அரசியல் தலைவர்கள்

சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பொன்விழா கொண்டாட்டத்துடன், இந்தி மாத நிறைவு நாள் விழாவும் கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல், தவறாக பாடப்பட்டது. அதாவது பாடலை பாடியவர்கள், தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும் என்ற வரி தெரியாமல் திக்கி நின்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: தாய்மொழிப் பற்றினை இனவாதம் என்றால் அது எங்களுக்குப் பெருமைதான்! - முதல்வர் ஸ்டாலின்!

திராவிட நல் திருநாடு தவிர்க்கப்பட்டதைத் தற்செயலானது எனத் தமிழர்கள் எப்படி நம்புவார்கள்? என ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.