கவரைப்பேட்டை ரயில் விபத்து: செல்போன்கள் ஆய்வு.. தீவிர விசாரணையில் ரயில்வே காவல்துறை
கவரைப்பேட்டை ரயில் விபத்து நடந்த இடத்தில் பதிவாகி உள்ள செல்போன்களை ஆய்வு செய்து வருகிறது ரயில்வே காவல்துறை.
கவரைப்பேட்டை ரயில் விபத்து நடந்த இடத்தில் பதிவாகி உள்ள செல்போன்களை ஆய்வு செய்து வருகிறது ரயில்வே காவல்துறை.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர்கள் சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் களமிறங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வுக்கு சென்ற எம்எல்ஏ கோ.தளபதியிடம் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மழையால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு அரசு எந்த உதவியையும் செய்யவில்லை என குற்றம்சாட்டினர்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் உள்ள வைத்திலிங்கத்தின் வீட்டில் 11 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது வீட்டின் முன் ஆதரவாளர்கள் குவிந்து வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் தஞ்சையில் உள்ள தனது இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியபோது, தொண்டர்களிடம் சாப்பிட்டு வரச் சொல்லி கூலாக சொன்னது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஆழியார் கவியருவிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், அருவியில் குளிக்க 3வது நாளாக வனத்துறை தடை விதித்துள்ளது.
கன்னியாகுமரி புதுக்கடை காவல் நிலையத்தில் ஆய்வாளராக இருந்தபோது சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஏசு ராஜசேகரன் ரூ.1.47 கோடி மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் அவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இபிஎஸ் ஆதரவாளர் இளங்கோவன், ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், கோவை, மதுரையில் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் வாகனங்கள் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டன.
கோவையில் பெய்து வரும் தொடர் மழையால் மேட்டுப்பாளையம் பகுதியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. சம்பவ இடத்தில் போலீசார், தீயணைப்பு துறையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த வெள்ளத்தில் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் அடித்து செல்லப்பட்டன.
இந்திய அணிக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வீரர் கேன் வில்லியன்சம் களமிறங்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதி, ஒரத்தநாடு வீடு, கோடம்பாக்கம் தனியார் கட்டுமான நிறுவனம் என முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு சொந்தமான 6 இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
Today Headlines : 09 மணி தலைப்புச் செய்திகள் | 09 AM Headlines Tamil | 23-10-2024 | Kumudam News24x7
மதுரையில் பெய்த கனமழையால் அங்குள்ள உழவர் சந்தை, குடியிருப்புகளில் மழைநீர் தேங்கியது.
வங்கக் கடலில் உருவாகி இருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘டாணா’ புயலாக உருவானது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்திற்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் உள்ள முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் 11 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை.
கனமழையால் பெங்களூரு கட்டிடம் இடிந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 4 ஆக அதிகரிப்பு.
அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீடு உட்பட 6 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
பிரிக்ஸ் மாநாட்டில் கலந்துக் கொள்ள ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடி, மாநாட்டிற்கு இடையே சீன அதிபரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் உள்ள எம்.எல்.ஏ ஹாஸ்டலில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் அறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 28 ஆயிரம் கன அடியாக அதிகரித்து வருகிறது.
ஈரோடு பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 90 அடியை எட்டியது.
வேடசந்தூர் அருகே மருமகளுடன் திருமணத்தை மீறிய உறவால், ஏற்பட்ட தகராறில் முதியவரை கொன்று உடலை தீ வைத்து எரித்த காவலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.