Today Headlines: 6 மணி தலைப்புச் செய்திகள் | 6 AM Headlines Tamil | 22-09-2024
Today Headlines: 6 மணி தலைப்புச் செய்திகள் | 6 AM Headlines Tamil | 22-09-2024
Today Headlines: 6 மணி தலைப்புச் செய்திகள் | 6 AM Headlines Tamil | 22-09-2024
சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தின் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படம் அடுத்த மாதம் தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்தின் இன்ட்ரோ விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், துப்பாக்கி குறித்து விளக்கம் கொடுத்தது விஜய் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஸ்ரீராம் ராஜேந்திரன் நியமனம். கொலிஜியத்தின் பரிந்துரையை ஏற்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உத்தரவு.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு குறித்து அக்கட்சியின் பொதுச்செயலாளார் புஸ்ஸி ஆனந்த் கொடுத்துள்ள புது அப்டேட், தொண்டர்களுக்கு உற்சாகம் அளித்துள்ளது.
வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.
வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர் ரிஷப் பண்ட் (109 ரன்) சதம் அடித்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிக சதம் அடித்த விக்கெட் கீப்பர் என்ற தோனியின் (6 சதம்) சாதனையை சமன் செய்துள்ளார்.
டெல்லியின் இளம் முதலமைச்சராக ஆம் ஆத்மி கட்சியின் அதிஷி பதவியேற்றார். அவருடன் 5 அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர்.
சிறைகளில் கைதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய குழு அமைக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், தமிழக அரசு, மாநில மனித உரிமை ஆணையம், சிறைத் துறை அதிகாரிகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
ஹைதராபாத்தில் இருந்து தனியார் ஆம்னி பேருந்து ஒன்று சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. தமிழ்நாடு - ஆந்திரா எல்லையான எளாவூர் சோதனை சாவடியில் பேருந்தை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர். அதில் அனுப்பப்பட்டிருந்த பார்சலை பிரித்து பார்த்தபோது அதில் ரூ.2.15 கோடி பணம் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து சென்னையை சேர்ந்த சூரஜ் பூரி என்பவரிடம் IT அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.