#BREAKING | மூழ்கிய நெற்பயிர்கள் - விவசாயிகள் வேதனை
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே அறுவடைக்கு தயாராக இருந்த 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்தன.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே அறுவடைக்கு தயாராக இருந்த 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்தன.
சூர்யாவின் 45வது படத்தை ஆர்ஜே பாலாஜி இயக்கவுள்ளதாக அபிஸியல் அப்டேட் வெளியாகியுள்ளது. இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.
சென்னைக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மீட்பு பணிகளை மேற்கொள்ள மண்டல வாரியாக அதிகாரிகளை நியமித்து மின்சாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து கல்வி அமைச்சர் நமசிவாயம் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி அரசு கல்லூரி கழிவறை மேற்கூரை பெயர்ந்து விழுந்ததில் கல்லூரி மாணவி படுகாயமடைந்தார். இதையடுத்து இச்சம்பவத்தை கண்டித்து 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பருவமழையை எதிர்கொள்ள வெளிமாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர்.
வரும் 27ம் தேதி தவெக மாநாடு நடைபெறவுள்ளதை அடுத்து, மூன்று சிறப்புக் குழுக்களை அமைத்து உத்தரவிட்டுள்ளார் அக்கட்சியின் தலைவர் விஜய்.
மாணவர்கள், இளைஞர்களை பெரிதும் பாதிக்கும் கூல் லிப் உள்ளிட்ட குட்கா பொருட்களை முற்றிலும் தடை செய்யக்கோரிய வழக்கில், கூல் லிப் போன்ற போதைப்பொருள் பயன்பாட்டை குறைக்க எம்மாதிரியான வழிகாட்டுதல் வழங்கலாம் என மத்திய, குட்கா நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் தரமில்லாத உணவு வழங்கப்படுவதாக ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் மாணவர் புகாரளித்த நிலையில், உணவு விடுத்திக்கு சென்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோ.வி.செழியன் ஆய்வு மேற்கொண்டார்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கனமழையால் நெல் நாற்று நட தயாராக இருந்த 100 ஏக்கர் விலை நிலங்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனைக்குள்ளாகினர்.