K U M U D A M   N E W S

மகாவிஷ்ணு விவகாரம்... விரைவில் அறிக்கை தாக்கல்

அரசுப்பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவின்போது பார்வை மாற்றுத்திறனாளியை அவதூறாக பேசிய வழக்கில் மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டார். இந்த விவகாரம் தொடர்பான அறிக்கை இந்த வார இறுதியில் தலைமைச் செயலாளரிடம் தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது

“கூட்டணி என்பது திமுகவோடு தான்.. முதல்வரை விட்டு திருமாவளவன் போக மாட்டார்” - அமைச்சர் ரகுபதி உறுதி

“முதல்வர் ஸ்டாலினும் விசிக தலைவர் திருமாவளவனும் நெருங்கிய நண்பர்கள். முதல்வரை விட்டு திருமாவளவன் போக மாட்டார்” என அமைச்சர் ரகுபதி பேட்டியளித்துள்ளார்.

’விஜய் மாமாவ ரொம்ப பிடிக்கும்’... விஜய் கொடுத்த கட்டிப்புடி வைத்தியம்... துள்ளி குதித்த சிறுவன்!

"கேரளாவுல விஜய் சார் என் பையனை கட்டிபுடிச்சதும் அவன் ரொம்போ சந்தோஷமாயிட்டான்.. அதுக்கப்பறம் அவர டி.வியில பாத்தாலே துள்ளுவான்" என பெருமூளை வாதம் பாதிக்கப்பட்ட தன் மகனுக்காக நடிகர் விஜய்யை பார்க்க கேரளாவிலிருந்து சென்னை வந்த குடும்பம் உற்சாகம் தெரிவித்துள்ளனர்.

சாம்சங் தொழிற்சங்க ஊழியர்கள் 2-வது நாளாக போராட்டம்

காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள சாம்சங் தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் ஊதிய உயர்வு, போனஸ் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 2வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்

'போராட்டத்தை விட்டு பண்டிகையை கொண்டாடுங்கள்'.. மமதா பானர்ஜியின் பேச்சால் சர்ச்சை!

''மகளை பறிகொடுத்துள்ள நாங்கள் எப்படி பண்டிகையை கொண்டாட முடியும். பண்டிகையை கொண்டாடுங்கள் என கூறும் மமதா பானர்ஜி, எனது மகளை திருப்பிக் கொடுத்து விடுவாரா?'' என்று மருத்துவ மாணவியின் பெற்றோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

'பிரதமர் மோடியை நான் வெறுக்கவில்லை'.. திடீரென பாச மழை பொழிந்த ராகுல் காந்தி!

''அரசியல் வேடிக்கையான ஒன்று. அரசியலில் நீங்கள் ஒருவரை தாக்கி பேசுவீர்கள். அவர் உங்களை தாக்கி பேசுவார். மறுபடியும் நீங்கள் அவரை பேச, அவர் உங்களை பேச என இது போரடிக்கிறது'' என்று ராகுல் காந்தி பேசியுள்ளார்.

ஜிஎஸ்டி குறைப்பு.. ஸ்நாக்ஸ் விற்பனை நிறுவனங்களின் பங்கு விலை உச்சம்!

கோபால் ஸ்நாக்ஸ் பங்கு விலை இன்று ஒரே நாளில் 9.51% அதிகரித்து ரூ.357.50 என்று புதிய உச்சத்தை கண்டுள்ளது. இதேபோல் பிகாஜி புட்ஸ், பிரதாப் ஸ்நாக்ஸ் நிறுவனங்களின் பங்கு விலையும் அதிகரித்துள்ளது

விஜய் கட்சியால் வாக்குகள் சிதறுமா..? - பிரேமலதா விஜயகாந்த் நச் பதில்

விஜய்யின் தமிழக வெற்றி கழகம் கட்சியால் வாக்குகள் சிதறுமா என்ற கேள்விக்கு 2026ம் ஆண்டு தேர்தலில் தான் தெரியும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர் அமெரிக்க முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்

'வெளிநாட்டில் இந்தியாவை மீண்டும் அவமானப்படுத்துவதா?'.. ராகுல் காந்தி மீது பாய்ந்த பாஜக!

''ராகுல் காந்தி போன்றவர்கள் நமது நாட்டின் உச்சநீதிமன்றத்தையும், தேர்தல் ஆணையத்தையும் வெளிநாட்டில் அவமதிப்பு செய்கின்றனர். நமது நீதித்துறையின் செயல்பாடுகளையும், நமது ஜனநாயகத்தையும் விமர்சிக்கின்றனர்'' என்று கிரண் ரிஜிஜு கூறியுள்ளார்.

'தமிழ்நாட்டு பள்ளிகளின் அவலநிலை தெரியுமா?'.. முதல்வர் ஸ்டாலினுக்கு பாஜக அடுக்கடுக்கான கேள்வி!

''தமிழகத்தின் பதின்ம வயது மாணவர்கள் தமிழில் எழுதப் படிக்க தடுமாறும் நிலை உருவாகியுள்ள வேளையில், தாய்மொழிக் கல்வியை ஊக்குவிக்கும் தேசிய கல்விக் கொள்கையை (NEP) முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பதன் காரணம் என்ன?'' என்று பாஜக கூறியுளளது.