K U M U D A M   N E W S

தி.நகரில் அலைமோதும் கூட்டம்

சென்னை தியாகராய நகரில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புத்தாடை வாங்க குவிந்த பொதுமக்கள்.

கமலா என பெயர் மாற்றம்.. கும்பமேளா நிகழ்ச்சியில் பங்கேற்ற ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி

உத்திரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளா நிகழ்ச்சியில் ஆப்பிள் நிறுவனத்தின் இணை நிறுவனர் மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ் மனைவி லாரன் பாவெல் கலந்து கொண்டுள்ளார்.

3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்

நாளை தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. திமுக ஆட்சியில் பல ‘சார்’கள் உருவாகிக்  கொண்டிருப்பதாக பழனிசாமி குற்றச்சாட்டு

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண் நோயாளி ஒருவருக்கு இளைஞர் பாலியல் தொல்லை கொடுத்த நிலையில் திமுக ஆட்சியில் பல ‘சார்’கள் உருவாகிக்  கொண்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். 

குமரி மாவட்ட மீனவர்கள் 10 பேர் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் 10க்கும் மேற்பட்டோர் டிகோகார்ஷியா தீவு கடற்படையினரால் கைது.

அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. கையும் களவுமாக பிடிபட்ட போதை ஆசாமி

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பெண்கள் வார்டில் புகுந்து 50 வயது பெண் நோயாளியிடம் போதை ஆசாமி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பொங்கல் பண்டிகை.. பொருட்களின் விற்பனை தீவிரம்.. களைகட்டும் கோயம்பேடு சந்தை

பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் மக்கள் பொருட்களை ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்

முடிந்தது சென்னை புத்தக கண்காட்சி... இனி அடுத்த வருடம் தான்

டிசம்பர் 27 தொடங்கி ஜனவரி 12 அன்று முடியும் என்று சொல்லப்பட்டியிருந்தது. அந்தவகையில் இன்றுடன் சென்னை 48வது புத்தக கண்காட்சி சிறப்பாக நிறைவடைந்தது.

எதிர்க்கட்சிகள் இல்லாத இடைத்தேர்தலா..? பாஜகவின் முக்கிய அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் குறித்து பாஜக சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில் இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக பாஜக அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்தியாவை தவிர்த்து விட்டு உலக நாடுகள் எந்த முடிவையும் எடுக்க முடியாது- ஆளுநர் ஆர்.என்.ரவி

உலகில் இந்தியாவை தவிர்த்து விட்டு உலக நாடுகள் எந்த முடிவையும் எடுக்க முடியாது.  இந்தியா முழுவதும் விவேகானந்தரின் அருளும் ஆசீர்வாதமும் நிறைந்துள்ளது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.