K U M U D A M   N E W S

கல்வராயன் மலைப்பகுதி விவகாரம்... தலைமைச் செயலாளருக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை

கல்வராயன் மலைப்பகுதி விவகாரத்தில் தலைமைச் செயலாளர் தனிப்பட்ட கவனம் செலுத்த வேண்டும். உத்தரவை செயல்படுத்தாவிட்டால் தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சொந்த மண்ணில் கெத்து காட்டிய அஸ்வின்... சரிவிலிருந்து மீண்ட இந்திய அணி

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய வீரர் அஸ்வின் சதம் விளாசினார்.

ரேஸ் கிளப் தொடர்ந்த வழக்கு... தமிழக அரசுக்கு கறாராக உத்தரவிட்ட நீதிமன்றம்

Madras Race Club : 160 ஏக்கர் நிலத்திற்கான குத்தகையை ரத்து செய்ததை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ரேஸ் கிளப் நிர்வாகம் உரிமையியல் வழக்கு தொடர்ந்தது. இந்த மனுவுக்கு செப்டம்பர் 23-க்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

This Week OTT Release: தங்கலான், வாழா இன்னும் பல... இந்த வார ஓடிடி ரிலீஸ் அப்டேட்ஸ் இதோ!

இந்த வாரம் ஓடிடி ரசிகர்களுக்கு தங்கலான், பேச்சி, வாழா உள்ளிட்ட மேலும் சில படங்களும் வெப் சீரிஸ்களும் காத்திருக்கின்றன. இதுகுறித்து முழுமையான தகவல்களை தற்போது பார்க்கலாம்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்... தமிழக அரசின் திடீர் உத்தரவு.. கொந்தளிக்கும் மக்கள்

தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்ட துணை வட்டாட்சியர் தற்காலிக வட்டாட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது

முக்கிய தலைகளுடன் மறைமுக பேச்சுவார்த்தை?.. விஜய்யின் மாஸ்டர் பிளான்.. அடுத்த கட்டத்திற்கு தயாரான த.வெ.க

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு விரைவில் நடைபெற உள்ள நிலையில், கட்சியில் வலிமையான இரண்டாம் கட்ட தலைவர்களை உருவாக்க வேண்டும் என்று தவெக தலைவர் விஜய் கணக்கு போட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து விரிவாக இந்த செய்தி தொகுப்பில் பார்ப்போம்.

இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி... கிடுகிடுவென சரியும் தங்கம் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.54,600-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ரூ.96க்கு விற்பனை செய்யப்படுகிறது

மைக்கேல்பட்டி மாணவி லாவண்யா வழக்கு.. நீதிமன்றத்தில் சிபிஐ வாதம்

தஞ்சாவூர் பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை வழக்கில் மதமாற்றம் செய்ய எந்த முயற்சியும் நடக்கவில்லை என்று மதுரை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

IND vs BAN Test Match : சேப்பாக்கத்தில் டிக்கெட் வாங்க குவிந்த ரசிகர்கள்

இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது. இன்று முதல் வரும் 23 ஆம் தேதி வரை தினசரி டிக்கெட் விற்பனை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெறும்

வங்க புலியின் ஆதிக்கத்திற்கு முடிவு கட்டுமா இந்தியா?.. வருண பகவான் வழிவிடுவாரா?

இந்தியா - வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில், மழைபொழிவால் ஆட்டம் தடைபட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.