பள்ளியில் திரையிடப்பட்ட GOAT.. வெடித்த சர்ச்சை | The GOAT Movie
நெல்லை விக்கிரமசிங்கபுரம் அரசு உதவி பெறும் பள்ளியில் விஜய் நடித்த கோட் திரைப்படம் திரையிடப்பட்டதாக புகார்.
நெல்லை விக்கிரமசிங்கபுரம் அரசு உதவி பெறும் பள்ளியில் விஜய் நடித்த கோட் திரைப்படம் திரையிடப்பட்டதாக புகார்.
ஸ்டார்ட்டப் நிறுவனங்கள் தொடங்கும் பட்டியலின நபர்களின் உதவித்தொகையை ரூ. 50 கோடியாக உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை திருவொற்றியூரில் வாயுக் கசிவு ஏற்பட்டதாக கூறப்படும் தனியார் பள்ளி நாளை முதல் செயல்படும் என அறிவிப்பு
சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வருகின்ற 14ஆம் தேதி சூர்யா நடிப்பில் வெளியாகும் 'கங்குவா' திரைப்படத்திற்கு காலை 9 மணி சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சரக்கு ஆட்டோ கவிழ்ந்து, விவசாய பணிக்குச் சென்ற 15 பெண்கள் காயம் அடைந்தனர். விபத்தில் காயமடைந்த பெண்கள் சாத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான 3 பேரிடம் தேசிய புலனாய்வு அதிகாரிகள் 2வது நாளாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்த பகுதிக்கு 3 பேரையும் அழைத்துச் சென்று விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி நகர்ந்து, வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டி நிலவி வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தாமதமான அறிவிப்பு காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறையா, இல்லையா என பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் குழப்பம் அடைந்தனர்.