"கொடி முக்கியம் பிகிலு.." களத்தில் இறங்கிய தவெக தொண்டர்கள் | Kumudam News 24x7
வில்லிவாக்கம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கியது தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள்.
வில்லிவாக்கம் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கியது தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள்.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் வீட்டை சூழ்ந்த வெள்ளநீர்.
சென்னை ராமாபுரத்தில் வெள்ளநீர் புகுந்த வீட்டுற்குள் சிக்கித் தவித்த 85 வயது மூதாட்டி மீட்பு.
மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்துள்ளது.
சென்னையில் இன்று மாலை முதல் கனமழை பெய்யும் என்பதால், நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் மழைப் பொழிவு அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.
சென்னை மயிலாப்பூரில் கனமழை காரணமாக வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதிக்குள்ளாகினர். இதைத்தொடர்ந்து வடிகால் பணிகள் முறையாக மேற்கொள்ளப்படாததே பாதிப்புக்கு காரணம் என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தொடர் மழை காரணமாக விருதுநகர் மாவட்டம் சதுரகிரி கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் பிரதோஷத்தை முன்னிட்டு கோயிலுக்கு வந்த பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
ரயில் பாதையில் மரம் முறிந்து விழுந்ததால் தாம்பரம் - கடற்கரை இடையேயான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து மரங்களை குரோம்பேட்டை காவல்துறையினர் அப்புறப்படுத்தியதால் ரயில் போக்குவரத்து சீரானது.
சென்னையில் இன்று மாலை முதல் கனமழை பெய்யும் என்பதால், அலுவலகம் சென்றவர்கள் சீக்கிரமே வீடு திரும்புவது நல்லது என, தமிழ்நாடு வெதர்மேன் அலர்ட் செய்துள்ளார்.