K U M U D A M   N E W S

அடுத்த 7 நாட்களுக்கு வெளுக்கப்போகும் மழை... புதிய எச்சரிக்கை!

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்று 22 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

டி.ஐ.ஜி ராஜலட்சுமியின் வாக்குமூலத்தை பதிவு செய்தது சிபிசிஐடி

வேலூர் சிறையில் ஆயுள் தண்டனைக் கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய விவகாரத்தில் டி.ஐ.ஜி ராஜலட்சுமியிடம் நேரடி விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசார் வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.

Irfan: குழந்தை பிறந்த வீடியோ... அடுத்த சர்ச்சையில் யூடியூபர் இர்ஃபான்... மருத்துவமனைக்கு நோட்டீஸ்!

யூடியூபர் இர்ஃபான் தனது குழந்தைப் பிறப்பை வீடியோவாக எடுத்து வெளியிட்ட விவகாரத்தில், சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்ப மருத்துவ ஊரக நலப்பணிகள் இயக்குநரகம் முடிவு செய்துள்ளது.

"எல்லாத்துக்கும் காரணம் அது மட்டும் தான்"- பழநியில் கண் கலங்கி நிற்கும் மக்கள்

திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே ஆயக்குடி பகுதியில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.

சொந்த ஊர்களுக்கு செல்லபவர்களுக்கு Good News!! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து 11,176 பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து 2,910 பேருந்துகளும் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

'பங்கு சந்தையில் 500 மடங்கு லாபம்'.. ரூ.14 கோடி மோசடி செய்த 6 பேர் கைது

பங்கு சந்தையில் முதலீடு செய்து 500 மடங்கு லாபம் சம்பாதிக்கலாம் எனக் கூறி ரூ.14 கோடி மோசடி செய்த 6 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

Diwali Special Bus: தீபாவளி சிறப்புப் பேருந்துகள்... பெட்டி, படுக்கையோட ரெடியாகிடுங்க மக்களே..!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 28 முதல் 30 வரை சென்னையிலிருந்து 11,176 பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

மணிக்கு 120 கிமீ.. “டானா” புயல் காட்டப்போகும் கோர முகம்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

வங்கக் கடலில் நாளை மறுநாள் வங்கக் கடலில் உருவாகும் டானா புயல், தீவிர புயலாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பிறந்தநாளன்று ED அலுவலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதான செந்தில் பாலாஜி திங்கள், வெள்ளிக்கிழமைகளில் ED அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையில் ஜாமில் வெளிவந்தார். இந்நிலையில், தனது பிறந்த நாளான இன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்.

எல்லாமே வீடியோ.. மீண்டும் மீண்டும் சர்ச்சையில் சிக்கும் இர்ஃபான்

குழந்தைப் பிறப்பை வீடியோ எடுத்து தனது யூடியூப் பக்கத்தில் யூடியூபர் இர்ஃபான் வெளியிட்ட விவகாரத்தில் மருத்துவர்கள் மீது மருத்துவ கவுன்சிலில் புகாரளிக்கவும் மருத்துவமனைக்கு நோட்டீஸ் அனுப்பவும் மருத்துவ ஊரக நலப்பணிகள் இயக்குனரகம் முடிவெடுத்துள்ளது.