K U M U D A M   N E W S

Chief Minister M. K. Stalin

திருச்சி மக்களுக்கு குட் நியூஸ்.. ரூ.2,000 கோடியில் JABIL ஆலை.. முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

JABIL நிறுவனம் ஆப்பிள், சிஸ்கோ, HP நிறுவனங்களுக்கு மின்னணு உபகரணங்களை விநியோகம் செய்து வருகிறது. திருச்சியில் JABIL தொழிற்சாலை அமைவதன்மூலம் சுமார் 5,000 பேருக்கு வேலை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொழில் தொடங்குவதற்கான பயணம் தானா? பொள்ளாச்சி ஜெயராமன்

இங்கே இருக்கும் தொழில்களுக்கெல்லாம் மின்சார கட்டணத்தில் சலுகை கொடுக்காமல், அமெரிக்காவிற்கு சென்று அங்குள்ள தொழிலதிபர்களை தமிழ்நாட்டிற்கு வந்து தொழில் தொடங்குங்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைத்துக்கொண்டிருக்கிறார் என பொள்ளாச்சி ஜெயராமன் விமர்சித்துள்ளார்

#breaking: மீனவர்களை மீட்க கோரி முதலமைச்சர் கடிதம்

இலங்கை கடற்படையால் கடந்த 7ம் தேதி கைது செய்யப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் 14 பேரை மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய் சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

"Late -ஆ வந்தாலும் Latest-ஆ இருக்கு.." - முதல்வரின் பேச்சால் அதிர்ந்த அரங்கம்

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்திருக்கிறேன். ஆனால் வரவேற்பு Latest-ஆக உள்ளது என சிகாகோவில் நடைபெற்ற தமிழர் கலை நிகழ்ச்சியில் பெருமிதத்துடன் பேசியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் - முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

"இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுத்திடவும்" - மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்

மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதலமைச்சர் வாழ்த்து

பாராலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலுவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

'பிஎம் ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்து போடுங்கள்'.. தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு நிபந்தனை.. பரபரப்பு கடிதம்!

''நமது குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலத்தை மலிவான அரசியல் ஒருபோதும் மறைத்து விடக்கூடாது ஆகவே அரசியல் வேறுபாடுகளை மறந்து நமது குழந்தைகள் உலகத்தரமான கல்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னுரிமை கொடுக்க வேண்டும்'' என்று தர்மோந்திர பிரதான் கூறியுள்ளார்.

ரூ.900 கோடி முதலீடு.. உலகின் 6 முன்னணி நிறுவனங்கள்.. ஒப்பந்தங்களின் முழு விவரம்

உலகின் 6 முன்னணி தொழில் நிறுவனங்களுடன் 900 கோடி ரூபாய் முதலீட்டில் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

5 மணி நேரம் பதற்றத்தில் இருந்த போலீஸார்.. முதலமைச்சர் சென்ற விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்...

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா புறப்படுவதற்கு முன், விமான நிலையத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல் புரளியால் பரபரப்பு ஏற்பட்டது.

அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா?.. 'Wait And See'.. கூலாக பதில் சொன்ன முதல்வர் ஸ்டாலின்!

முதல்வர் ஸ்டாலின் சுமார் 17 நாட்கள் அமெரிக்காவில் இருப்பதால், அவர் வெளிநாடு செல்வதற்கு முன்பாக தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வந்தன. அதாவது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்-அமைச்சராக நியமனம் செய்யப்படலாம் எனவும் 3 சீனியர் அமைச்சர்களின் பதவி பறிக்கப்பட்டு 3 புதிய முகங்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வேகமாக பரவின.