K U M U D A M   N E W S

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=0&order=created_at&post_tags=chennaicrime

போரூர் சிறுமி பாலியல் வன்கொடுமை - கொலை வழக்கு: தஷ்வந்தின் மரண தண்டனையை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சென்னை போரூர் சிறுமி ஹாசினி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில், குற்றம் உறுதியாக நிரூபிக்கப்படாததால், குற்றவாளி தஷ்வந்துக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 45 லட்சம் மோசடி: ஒருவர் கைது!

மருத்துவத்துறை மற்றும் மின்சாரத்துறைகளில் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 45,41,000 மோசடி செய்த வழக்கில், பினகாஷ் எர்னஸ்ட் என்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது மனைவி வான்மதியைத் போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை விமான நிலையத்தில் ₹20 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்.. கென்யா நாட்டு இளைஞர் கைது!

ஆப்பிரிக்க நாடான கென்யாவிலிருந்து, சுமார் 2 கிலோ அளவிலான கொக்கைன் போதைப்பொருள் கடத்தி வந்த இளைஞரை, சென்னை விமான நிலையத்தில் மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் கைது செய்து, போதைப்பொருளைப் பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச மதிப்பு ₹20 கோடியென மதிப்பிடப்பட்டுள்ளது.

மகளின் காதலனைத் தாக்கிய முன்னாள் பாஜக நிர்வாகி.. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது!

சென்னை அயனாவரத்தில் மகளின் காதலன் சந்திக்க வரும்போது தாக்குதல் நடத்திய முன்னாள் பாஜக நிர்வாகியான தந்தையை போலீசார் கைது செய்துள்ளனர்

காவல் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட ரவுடிகள்: தப்பிச்செல்ல முயன்றபோது கை, காலில் எலும்பு முறிவு!

சென்னையில் செல்போன் பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு, போலீசாரைத் தாக்கி காவல் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட இரண்டு ரவுடிகள், தப்பிச் செல்ல முயன்றபோது தடுக்கி விழுந்து கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின்னர் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அத்தையின் இறுதிச் சடங்கில் உறவினர்களால் தாக்கப்பட்ட இளைஞர் உயிரிழப்பு!

கொளத்தூரில் அத்தையின் இறுதிச் சடங்கின்போது ஏற்பட்ட தகராறில், உறவினர்களால் தாக்கப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.